ஜனாதிபதியின் கருத்தினை வரவேற்றார் ஹர்ஷ டி சில்வா….

339

புதிய இலங்கையை உருவாக்குவதற்கு சர்வகட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதவிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்துடன் தாம் உடன்படுவதாகவும், அதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் இந்தோ – பசிபிக் பொருளாதார சக்தி மையமாக நவீன ஏற்றுமதி செயல்முறைகளை நோக்கிய போட்டித்தன்மை கொண்ட சமூக சந்தைப் பொருளாதாரமாக இலங்கையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE