கிளிநொச்சியில் விமானப் படையினரினால் உலர் உணவு பொதி வழங்கி வைப்பு!

335

விமானப் படையினரின் நிதிப் பங்களிப்பில் மக்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினரின் 11ம் ஆண்டு நிகழ்வு நிறைவு தினத்தை முன்னிட்டு விமானப்படை வினரின் ஒய்வுநிலை அதிகாரிகளின் நிதிப் பங்களிப்பில் இன்றைய 03.08.2022 தினம் குறித்த உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இராமநாதபுரம், அழகாபுரி கிராமத்தில் உள்ள 200க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதியினை இரணைமடு விமானப்படையின் பொறுப்பதிகாரி D.M.R தசாநாக்க வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வு, இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், விமானப்படையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

SHARE