சில்மிஷம் செய்த வாலிபர்: பொலிசார் முன்னிலையில் செருப்பால் அடித்து உதைத்த மாணவி….(வீடியோ இணைப்பு)

425

தன்னிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத மாணவி காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் மாணவி.

மாணவியை சில்மிஷம் செய்தது தொடர்பாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த வாலிபரை, மாணவி ஒருவர் காவலர் முன்னிலையிலேயே செருப்பால் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE