அதிர்ச்சிகளை தாங்கும் சக்தியை வழங்கும் “டெட்ரிஸ்” ஹேம்: ஆய்வில் தகவல்

451
சமகாலத்தில் பல வகையான கணனி ஹேம்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையிலும் “டெட்ரிஸ்” எனும் ஹேம் ஆனது பல வருடங்களுக்கு முன்னிருந்தே ஹேம் பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இக் ஹேமினை உயர் வேகத்தில் விளையாடி வருவதனால் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளை தாங்கும் வல்லமையை பெற முடியும் என ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வி ஒன்றின்படி டெட்ரிஸ் ஹேமினை தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் வரை விளையாடும் பொழுது பழைய நினைவுகளை மூளையில் இருந்து அழிக்கின்றது என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE