அவுஸ்திரேலியாவில் ரயில் பாதையில் விழுந்த பேத்தியை பாய்ந்து காப்பாற்றிய தாத்தா (வீடியோ இணைப்பு)

420
அவுஸ்திரேலியாவில் ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக ரயில் வந்த பாதையில் விழுந்தபோது, அந்த குழந்தையின் தாத்தா குதித்து பேத்தியை காப்பாற்றியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று, சீக்கிய கோவிலுக்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.அப்போது, அந்த குடும்பத்தின் ஒன்றரை வயது பெண் குழந்தையை, குழந்தைகளுக்கான சக்கர வண்டியில் வைத்திருந்துள்ளனர்.இந்நிலையில், அந்த வண்டி திடீரென தவறி, ரயில் பாதையில் குழந்தையுடன் விழுந்துள்ளது.

அந்தநேரத்தில் அதே பாதையில், தொலைவில் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குழந்தையின் தாத்தா, ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ரயில் வந்த பாதையில் குதித்து பேத்தியை தூக்கி காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து அந்த குழந்தையின் சித்தப்பா கூறுகையில், என் அப்பா ஒரு மிகப்பெரிய காரியத்தை சாதித்து இருக்கிறார்.

தனது உயிரைப்பற்றி ஒரு வினாடி கூட சிந்திக்காமல், ரயில் பாதையில் குதித்து, என் சகோதரர் மகளை காப்பாற்றினார்.

தற்போது குழந்தை நன்றாக உள்ளது. என் அப்பாவும் நன்றாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

SHARE