நீரிழிவு நோயோளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

762
நீரிழிவு நோயோளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.சோளத்தில் உள்ள சத்துக்கள்

ஆற்றல் – 349 கி.கலோரி

புரதம் -10.4 கிராம்

கொழுப்பு – 1.9 கி

மாவுச்சத்து – 72.6 கி

கால்சியம் – 25 மி.லி

இரும்புசத்து 4.1 மி.கி

பீட்டா கரோட்டின் – 47 மி.கி

தயமின் – 0.37 மி.கி

ரிபோப்ளோவின் 0.13 மி.லி

மருத்துவ பயன்கள்

1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.

2. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

3. கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.

4. சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

5. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

6. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

சோள ரொட்டி

சோள மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், உப்பு, மல்லித்தழை சேர்த்து சற்று இளம் சூடான தண்ணீர் கொண்டு நன்கு பிசைந்து சிறிது நேரம் வைத்தபின் கனமான ரொட்டிகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள்.

பயன்கள்

சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு உணவாக சோள ரொட்டியை எடுத்து வருவதன் மூலம், அவர்களது சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கொழுப்பை குறைக்க சோள ரொட்டி மிகவும் உதவும்.

சோள இட்லி

உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து போதுமான நீரில் ஊற விடவும். பொதுவாய் உளுந்து 1 மணி நேரம் ஊறினால் போதுமானது.

அரிசியையும் சோளத்தையும் தனித்தனியாக போதுமான நீரில் ஊற வைக்கவும், இரண்டுமே 6 மணி நேரம் ஊற வேண்டும்.

இட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும், பின்னர் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும். மிருதுவான, ருசியான சோள இட்லி தயார்.

பயன்கள்

சோள இட்லியில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம்.

ரத்தசோகையைத் தடுத்து நல்ல ஆரோக்கியத்தை தரும்.

SHARE