இன்று காலை 11.00 மணியளவில் ஆனந்தசங்கரியின் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரதான வேட்பாளராக வன்னிமாவட்டத்திற்கு முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர் தலைமை வேட்பாளராக இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வரும்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிஷோர்.
Posted by Thinappuyalnews on Monday, July 13, 2015
முன்னாள் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவகையில் வன்னி மாவட்டத்திற்கு ஒரு ஆசனத்தைக் கோரியிருந்தேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தரவில்லை. மக்களுக்காக சேவைசெய்யும் நோக்கிலேயே நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றேன்.
தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு. அதில் அங்கம் வகித்த பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவநாதன் கிஷோர்.