போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்.

428

இலங்கையில் உள்ள இணைய பாவனையாளர்களிடையே தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக பொலிஸாருடன் மோதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் காணொளி மாறியுள்ளது.

போக்குவரத்து பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்து தலைக்கவசம் ஒன்றையும் எடுத்துச் சென்ற அவரின் காணொளி இணையத்தில் தீ போல பரவியுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை எடுத்துக்கொண்டமையால் ஆத்திரமடைந்தமையாலேயே அவர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

அதி சொகுசு பி.எம்.டபிள்யூ காரில் வந்த குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்பில் புது தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பெண் காரை ஒரு கையில் செலுத்திய வண்ணம் மறு கையில் குழந்தையை அணைத்துக்கொண்டு பாலூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாகவே போக்குவரத்து பொலிஸார் அவரின் காரை இடைமறித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் பொலிஸார் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவே அப்பெண் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச சொத்தை களவாடியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது கணவனும் அவருடனேயே கைதுசெய்யப்பட்டுள்ளார், தனது மனைவி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கணவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு காரை செலுத்த அனுமதிக்கலாம் எனக் கூறி பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். எனினும் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், பொலிஸாரின் கடமைகளுக்கு தடங்கலை ஏற்படுத்திய நிகழ்வு சமூக தளங்களில் பெரிதாக பேசப்பட்டது.

இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.

வீதி ஒழுங்கை மீறியமைக்காக தண்ட அறவீடு செய்ய முற்பட்ட போதே குறித்த பெண் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE