ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைப்பதற்காக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தும் வருகின்றனர்.இந்த செயல்களில் சிறுவர்களையும் அவர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை ஐ,எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் பிணைக்கைதிகளை சிறுவர்கள் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ஈராக்கின் டைகிரிஸ் நதியின் அருகே எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது, வீடியோவில் கைதிகள் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சுகின்றனர். எனினும் சிறுவன் ஒருவன் அவர்களை துப்பாக்கியால் சுடுகிறான். பின்னர் அவர்களது உடல் நதியில் வீசப்படுகிறது. இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பினர் சிறுவர்களை நாச வேலைகளில் ஈடுபடுத்திவருவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |