ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவை பகிரங்கப்படுத்திய அநுராதபுர தேர்தல் கூட்டம்.

393
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு வெளிப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்கவில்லை.

குறிப்பாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்தக்கூட்டத்தை பகிஸ்கரித்தார். அத்துடன் எஸ்.பி.திஸாநாயக்க, சாந்த பண்டார, சரத் அமுனுகம ஆகியோரும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எனினும் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பதற்றத்துடன் காணப்பட்டார்.

இதற்கிடையில் குறித்த கூட்டம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாணத்துக்கான இரண்டு அமைப்பாளர்களை நியமித்தார்.

இதேவேளை அநுராதபுர கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் எதையும் காணமுடியவில்லை.

SHARE