பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து அட்டூழியம் செய்த இலங்கை ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)

401
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதன் மூன்றாவது போட்டி கொழும்பு பிரதேச மைதானத்தில் நேற்று நடந்தது.முதலில் நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத்(44), அணித்தலைவர் அசார் அலி(49), ஹபீஸ்(54), சர்பராஸ் அகமது(77), சோயப் மாலிக்(35) கைகொடுக்க, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 316 ஓட்டங்கள் குவித்தது.

பின் கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு பெரேரா(20), டில்ஷன்(14) ஏமாற்றினர் அணித்தலைவர் மேத்யூஸ்(4) நிலைக்கவில்லை. 33.3வது ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்து தவித்தது. அப்போது அரங்கின் ஒருபகுதியில் இருந்த ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

சிலர் கல் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை மைதானத்தில் எறிந்தனர். இதனால் ‘பீல்டிங்’ செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள் பதட்டம் அடைந்தனர்.

இதையடுத்து வீரர்கள் ‘பெவிலியன்’ திரும்பினர். வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பொலிசார் தலையிட்டு வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை சுமார் அரைமணி நேர தாமதத்திற்கு பின் போட்டி மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து சொதப்பிய இலங்கை அணி 41.1 ஓவரில் 181 ஓட்டங்ளுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணி, இலங்கையை 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது, இதையடுத்து பாகிஸ்தான் அணி தொடரில் 2–1 என முன்னிலை பெற்றது.

SHARE