மஹிந்த கையை கிள்ளியவர், காலைத் தொட்டார்.

398

மஹிந்தவின் கையை நபர் ஒருவர் பிடித்து இழுத்த தும் , அதன் பின்னர் நடந்ததையும் மக்கள் மறந்து விட்ட போதிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்னும் மறக்கவில்லையெனத் தெரிகின்றது.

ஆரம்பத்தில் சம்பவத்திற்கான காரணங்களை தேர்தல் மேடைகள் மற்றும் ஊடகவியலாளர் மாநாடுகளில் விளக்கினர்.

பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றுக்கு கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் நபரை அழைத்து வந்தனர்.

அவர் தன் வாயாலேயே நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை தன் பங்குக்கு விளக்கினார்.

ஆர்வமிகுதியினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் , மஹிந்தவின் தீவிரவிசுவாசி தான் எனவும் , வீட்டில் மஹிந்த ராஜபக்ஷவின் படங்களையும் ஒட்டிவைத்துள்ளதாகவும் அந்நபர் தெரிவித்திருந்தார். எனினும் இதன்பின்னரும் ஓயவில்லை கட்சியினர் .

ஆம் , தேர்தல் மேடையொன்றுக்கு அவரை அழைத்து வந்துள்ளனர். அவரும் மஹிந்தவின் கால்களில் விழுந்து வணங்குகிறார்.

தாம் மறந்துவிட்ட, மறந்து வரும் ஒரு சம்பவத்தை மீண்டும் மீண்டும் நிறுவுவதற்கு இத்தனை பகீரத பிரயத்தனங்கள் எதற்கு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காணொளியை பாருங்கள்…

SHARE