கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைய வேண்டுமா?

428
வெள்ளரிக்காய் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒருவகை சத்து நிறைந்த பொருள் ஆகும்.உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

மேலும் வெள்ளரிக்காயை நறுக்கி கருவளையம் உள்ள இடத்தில் வைத்து வந்தால் விரைவில் மறையும். மேலும் புகைப்பிடிப்பதல், மதுபானங்கள் குடிப்பது ஆகியவற்றால் உடலில் அதிகரிக்கும் தீமையை கட்டுபடுத்துவதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு.

உங்களுடைய சருமம் பொலிவுடன் திகழ்வேண்டுமா? அதற்கும் வழி இருக்கிறது.

வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகம் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் உங்கள் சருமம் பொலிவு பெறுவது நிச்சயம்.

மேலும் வெள்ளரிக்காயில் 90 சதவீதம் நீர் சத்துள்ளதால் உடலில் ஏற்படும் நீர் பற்றக்குறையை சமன் செய்கிறது.

உங்கள் பற்களின் ஈறுகளை பாதுகாப்பதில் வெள்ளரி முக்கிய பங்காற்றுகிறது. வெள்ளரியில் உள்ள பைடோகெமிக்கல் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாகிடீரியாக்களை அழித்துவிடும். மேலும்  வெள்ளரி துண்டை வாயில் வைத்து சிறிது நேரம் மென்று துப்பினால் ஈறுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தும்.

முக்கியமாக புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய பல பொருட்கள் வெள்ளரியில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே உங்களது தினசரி உணவில் வெள்ளிரியை பயன்படுத்திவந்தால்,  உடல் ஆரோக்கியத்துடன் மட்டுமில்லாமல் புத்துணர்ச்சியோடும் இருக்கும்.

SHARE