இன்றைய தங்கத்தின் விலை குறைந்துள்ளது

248

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (02) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்  “22 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை  154,500 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை அதன் விலை 156,300 ரூபாவாக காணப்பட்டது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை  169,000 ரூபாயாக காணப்பட்ட “24 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை இன்று  167,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE