சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

841

சர்க்கரை நோயில் சீனா முதலி டத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. சர்க்கரை நோய் வந்தால் அழையா விருந்தாளிகளாக பிரஷர், கொலஸ்ரால் ஆகியவையும் பின்தொடர்ந்து வந்து விடும். இதனை சரியாக கவனிக்காமல் விட்டால் கல்லீரல், சிறுநீரகம், கண், இதயம் என அனைத்து உறுப்புகளிலுமே பிரச்னை ஏற்பட்டு விடும். கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் இந்நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம் பரியம் நமது வாழ்க்கை நடை முறை ஆகியவையும் முக்கிய காரணிகளாக உள்ளன. இதுபற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு உதவிப்பேராசிரியர் ஜான் வியோஜ் கூறியதாவது:

இரண்டு வகை

சர்க்கரை நோயை ஆங்கில மருத்து வம் டைப் -1, டைப் -2 என 2 ஆக பிரித்துள்ளது. இதில் டைப் எனப்படுவது சிறு குழந்தைகள் மற்றும் சிறுவயதில் ஏற்படும் சர்க்கரை நோயாகும். இதற்கு வைரல் இன்பெக்சன், நோய் எதிர்ப்பு சக்தி கணையத்தை பாதித்தல் காரணமாக இருக்கலாம். இதற்கு நேரடியாக இன்சுலின் செலுத்துவதும், உணவு கட்டுப்பாடு மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம். டைப் 2ல் 15க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் போதல், இன்சுலின் சுரந்தாலும் நமது உடல் அதனை முறையாக பயன்படுத்த முடியாமல் போதல், அல்லது உடலின் சில பாகங்கள் அல்லது உறுப்புகள் இன்சுலின் செயல்பாட்டை ஏற்காமல் இருத்தல், இன்சுலினுக்கு எதிரான ஹார்மோன் சுரத்தல், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் உடலுக்குள் நிகழும் மாற்றங்கள், குடும்ப பாரம்பரியம் போன்றவை காரணமாக இருக்கும். இதற்கு சர்க்கரையின் அளவை கணக்கிட்டு அதற்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு சர்க்கரை அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும். அதற்கேற்ப வீரியமிக்க மாத்திரைகள் வழங்கப்படும்.மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, இன்சுலின் செலுத்தப்படும்.

அறிகுறிகள்

அதிக தாகம் எடுத்தல், எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலின் மெல்லிய பாகங்களில் வெடிப்பு ஏற்படுதல் (ஆணுறுப்பு, விரல் நுனிகளில் வெடிப்பு, ஊறல் இருக்கும்), தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

ரத்தபரிசோதனை

பொதுவாக 35 வயதிற்கு மேல் ஆண்டிற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஆரம்பத்தில் சர்க்கரை அளவை துல்லியமாக அறிய தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். அதன்பின் நோயாளிகள் தன்மை பற்றி மருத்துவர்களுக்கு நன்றாக தெரிந்து விடும் என்பதால் தேவைப்படும் போது மட்டும் சோதனை செய்யப்படும். உடல் பருமன் உடையவர்கள், குடும்ப பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 25 வயது முதலே சோதனை செய்யலாம். ஆண்களை பொறுத்தவரை இடுப்பளவு 90 செ.மீட்டருக்குள்ளும், பெண்களுக்கு 80 செ.மீக்குள்ளும் இருக்க வேண்டும். இந்தளவை தாண்டினால் உடல் எடை அதிகரி த்து விட்டதாக அர்த்தம். இவர்களும் ரத்தபரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

கண்ணையும், பாதத்தையும் கவனியுங்க

சர்க்கரை நோய் நரம்புகளையும் வலுவிழக்க செய்யும். மேலும் சிறிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் சிறிய ரத்த குழாய் மற்றும் பெரிய ரத்த குழாய் பாதிப்பு ஏற்படும். பெரிய ரத்த குழாய் பாதிப்பால் கால்கள், இதயம் போன்றவவை பாதிக்கபடும். இதனால் மாரடைப்பு, கால்களில் உணர்ச்சியற்று போதல் ஏற்படும். நோயை கண்டு கொள்ளாவிட்டால் சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். சிறிய ரத்தகுழாய் பாதிப்பால் கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் கொலஸ்டிரல், பிரஷர், கிரியாட்டினின், ஆல்பமின்(உப்பு) போன்ற நோய்களுக்கான பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம். மேலும் கண்களையும் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பதால் கண்களில் திரையில் உள்ள நரம்புகளில் பாதிப்பை கண்டறிந்து லேசர் சிகிச்சை மூலம் பார்வை இழப்பை தடுக்க முடியும். இல்லாவிட்டால் திடீரென பார்வையிழப்பு ஏற்படும். இதேபோல் சர்க்கரை நோய் தாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்களுக்கு காலில் உணர்ச்சி இருக்காது. இதனால் கால் பாதங்கள் கல் மற்றும் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டால் தெரியாது. இதனால் ஏற்படும் புண் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். எனவே தினமும் தங்களது பாதங்களை பார்க்க வேண்டும். வெடிப்பு. டாட் போன்றவை இருந்தால் தகுதியான மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

பாஸ்ட் புட்டால் 20 வயதிலேயே பாதிப்பு டாக்டர் ஜான் வியோஜ் மேலும் கூறியதாவது:

பாஸ்ட் புட் வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பாக்கெட்டுகளில் வரும் கிழங்கு வகை சிப்ஸ்கள், தின்பண்டங்களையும், நூடுல்ஸ், பீட்சா, பர்கர், ஹாட்டாக் போன்ற பேக்கரி வகை உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். இதில் உள்ள வேதிப்பொருட்கள் காரணமாக சிறுவயதிலேயே பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

ஆயுர்வேதம் என்ன சொல்லுது

கோட்டாறு அரசு ஆயுர் வேத மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி கூறியதாவது: ஆயுர்வேதத்தில சர்க்கரை நோய் 20 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கபத்தினால் ஏற்படும் 10 வகை சர்க்கரை நோய்களை குண மாக்கலாம். பித்தம் காரணமாக ஏற்படும் 6 வகை சர்க்கரை நோய்களையும், வாதம் காரணமாக ஏற்படும் 4 வகை சர்க்கரை நோய்களையும் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதில் வாதம் காரணமாக ஏற்படும் நோய்களுக்கு கடுமையான சிகிச்சைகள் தேவை. சர்க்கரை நோய் என்றால் இன்சுலின் சுரக்காது என்பது அல்ல. கணையம் சுரக்கும் இன்சுலின் சுக்ரோஸில் உள்ள சக்தியையும், கழிவையும் பிரிக்க முடியாமல் போவதும் காரணமாகும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்துகளுடன், நீராவி குளியல், மாசாஜ் போன்றவை மூலமும் ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நெற்றியில் வியர்வை வரும் வரை நடக்க வேண்டும். சீந்தல்சாறு, திரிபாலா பொடி, கோமுத்திர திலாசித்து, மஞ்சள் பொடி மற்றும் நெல்லிச்சாறு கலவை, சந்திர பிரபா மூலிகை, நிஷா சதாகாதி கசாயம், வசந்த கசுமநந்திரம், மேகமுக்கர வடி, சொர்ண ராஜா வங்க�ந்திரம் போன்ற மருந்துகள் பிரதானமாக விளங்குகின்றன.

சர்க்கரை நோயாளிகள், கார்போ ஹைடிரேட், கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை, ராகி, கொள்ளு, பச்சைப்பயறு போன்ற பாராம்பரிய உணவுகள் நல்லது. பழங்களை அளவோடு சாப்பிடலாம்.

அறிகுறிகள்

ஆயுர்வேதாவில் பல், வாய், கண், மூக்குகளில் கழிவுகள் தேங்குவது, கால், உள்ளங்கை எரிச்சல், தோலில் பிசுபிசுப்பு, அதிகம் சிறுநீர் பிரிதல், சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் அரித்தல், சிறுநீர் அடிக்கடி கழித்தல் போன்றவை அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகற்காய் அதிகம் உண்பதும் ஆபத்து 

டாக்டர் கிளாரன்ஸ் டேவி மேலும் கூறியதாவது: நமது உடலுக்கு 6 சுவையுடைய உணவுகள் அவசியம். இவை சீரான அளவில் இருக்க வேண்டும். அளவு மாறினால் உடலுக்கு பிரச்சனை எற்படும். கசப்பு சுவையுடைய பாகற்காய் அதிகம் உண்பதால் சர்க்கரை நோய் குணமாகும் என அதிகம் பேர் அதனை அதிகளவு சாப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. பாகற்காயை அளவோடு எடுக்கலாம். ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்தால் உடலில் கபம், வாதம், பித்தம் ஆகியவற்றில் மாறுபாடு ஏற்படும்.

மூங்கில் அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது.சர்க்கரை நோயை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பாரம்பரிய நெல் வகைகாளன கருத்தக்கார், மாப்பிள்ளைச்சம்பா, காடடு யாணம் உள்பட பல்வேறு வகைகள் உள்ளன.

Mdli diabetes in China is unique in many ways. 2nd place to capture the top spot in India has progressed rapidly.

SHARE