முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.