தேர்தல் முடியும் வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்

407
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டார்.

இதந்போது, ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் கேள்விகள் தொடுக்க முற்பட்டபோது, நான் பேசவில்லை. தேர்தல் முடியும் வரையில் நான் ஊமையாக இருக்கவே விரும்புகிறேன்.

மேலும் நான் பேசி இணையங்களில் வெளியான வீடியோ தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன் என்றார்.

SHARE