எமது மக்களுக்கு ஒரு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் உள்ளது -வினோநோகராதலிங்கம்

474

 

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது.
vinonokarathalinkam

இதில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான விநோநோகராதலிங்கம் உரையாற்றும் போது>

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றார்கள். அத்தனையும் தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழித்து எமது அடிமைகள் ஆக்குவதையே நோக்காக கொண்டன. அதனை எமது மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். எமது மக்களுக்கு ஒரு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் உள்ளது என தெரிவித்தார்.

SHARE