WhatsApp இன் அதிரடி மாற்றம் – பயனர்களுக்கு மெட்டா தந்த மற்றுமொரு அப்டேட்

138

 

வாட்ஸப்பில் சேமித்து வைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உட்பட அனைத்தும் இனி கூகுளில் சேமித்து வைக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப்
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.

இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.

வாட்ஸ்அப் கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

புதிய அப்டேட்
வாட்ஸ்அப்பில் சேமித்து வைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உட்பட அனைத்தும் இனி கூகுளில் சேமித்து வைக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் சேமித்து வைத்திருக்கும் ஒவ்வொரு File-ம் கூகுளில் சேமிக்கப்படும். எனவே இது கூகுள் Storage கணக்கை பாதிக்கும் நிலை ஏற்படும்.

கூகுள் கணக்கில் Storage போதியளவு இல்லையென்றால், வாட்ஸ்அப்பில் backup செய்ய முடியாமல் போகும்.

WhatsApp Beta பயன்படுத்துபவர்களுக்கு இது தொடர்பான தகவலை நிறுவனம் வழங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Android தொலைப்பேசிகளில் WhatsApp Beta பதிப்பின் 2.23.26.7ல் இந்த செய்தி வருகிறது. அதில், அடுத்த சில மாதங்களில் உங்கள் கூகுள் டிரைவ் சேமிப்பிடத்தைப் வாட்ஸ்அப் பயன்படுத்தத் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

வாட்ஸ்அப் தரவு எவ்வளவு சேமிப்பகத்தைப் பயன்படுத்துகிறது என்பதை யூசர்களுக்கு காட்டும். யூசர்கள் தங்கள் தரவை கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் தொடர்ந்து backup எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE