Google Maps-ல் புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த அம்சத்தின் பெயர் ‘fuel-saving’.
பெயரைப் போலவே இந்த அம்சம் வாகனம் அதிக எரிபொருளை சிக்கனம் செய்ய உதவுகிறது.
United States, Canada மற்றும் Europe-ல் உள்ள பயனர்களுக்காக இந்த fuel-saving அம்சம் செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Fuel-saving அம்சம் செயல்படுத்தப்பட்டால், Google Maps செயலி நாம் பயணிக்கும் வெவ்வேறு வழிகளுக்கான எரிபொருள் பயன்பாட்டை கணக்கிடும்.
Live traffic updates மற்றும் சாலை நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும்.
எந்தப் பாதையில் சிறந்த எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதை இந்த அம்சம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
Google Maps Fuel-Saving அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
Google Maps App-ஐ திறந்து உங்கள் Profile Iconஐ தட்டவும்.
பின்னர் Settings-க்கு சென்று Navigation-ஐ தேர்ந்தெடுக்கவும்.
Route options கண்டறிந்து, அதிக எரிபொருள் சேமிப்பை தரும் வழியைத் தேர்வு செய்யவும்.உங்கள் வாகனம், Petrol அல்லது Diesel-ல் இயங்கும் இன்ஜினா அல்லது Electric வாகனமாக என்பதைக் குறிப்பிடவும்.
பின்னர் உங்கள் இலக்கைத் தேடி பயன்படுத்திக்கொள்ளவும்.
இந்த அம்சத்தில் நமது வாகனத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருளைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்து பெறுவதற்கான விருப்பம் உள்ளது.
எஞ்சின் வகை தேர்வு செய்யப்படாவிட்டால், பெட்ரோல் இயல்புநிலையாக மாறும், இது பல நாடுகளில் மிகவும் பொதுவான என்ஜின் வகையாகும்.