ரூ.10,000-க்கும் குறைவான விலையில் Redmi 13C 5G .., வெளியான முக்கிய அறிவிப்பு

111

 

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Redmi 13C 5G போனை சலுகை விலையில் வாங்கலாம்.

ஏஐ கேமரா, 1டிபி மெமரி போன்ற அம்சங்களில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) அமேசானில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:
இந்த Redmi 13C 5G போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) display வருகிறது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 nits பீக் Brightness mode வருகிறது. அதோடு Corning Gorilla Glass பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Android 13 OS கொண்ட Octa Core MediaTek Dimensity 6100 + 6nm சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு Graphics Card உள்ளது. அதனுடன் சேர்ந்து MIUI 14 உதவி உள்ளது.

இந்த Redmi 13C 5G போனில் 4 GB RAM + 128 GB மெமரி, 6 B RAM + 128 GB மெமரி, 8 GB RAM + 256 GB மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதனுடன் 1 TB microSD சப்போர்ட் மற்றும் 5 MP camera உள்ளது.

இந்த கேமராவில் ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) மற்றும் சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) போன்ற Features உள்ளன. மூன்று கலர்களின் இந்த போன் கிடைக்கிறது.

4 GB RAM + 128 GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999 ஆகவும், 6 B RAM + 128 GB வேரியண்ட்டின் விலை ரூ.12,499 ஆகவும், 8 GB RAM + 256 GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 14,499 ஆகவும் இருக்கிறது.

இந்த மொபைல் போன் அமேசான் தளத்தில் அறிமுக சலுகையில் ரூ.1000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விலையை ICICI Bank Credit Card பயன்படுத்தி பெற முடியும். இதன் மூலம் ரூ.10,999 விலை கொண்ட 4 GB RAM + 128 GB மெமரி வேரியண்ட்டினை ரூ.9,999 க்கு பெற முடியும்.

SHARE