வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் மிரள வைக்கும் அப்டேட்! இனி இவர்களுக்கு கொண்டாட்டம் தான்

119

 

ஆப்பிள் பயனார்களுக்கு வாட்ஸ் அப்பில் HD தரத்திலான படங்கள், வீடியோக்களை பகிரும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் HD தரத்திலான படங்கள் மற்றும் வீடியோக்களை Chat செய்யும்போது பகிர்வது என்ற அம்சம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஆப்பிள் IOS பயனர்களுக்கும் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தகவலின்படி HD படங்கள், வீடியோக்கள் பகிர்வதுடன் Status-களிலும் HD தரத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடலாம்.

இந்த அம்சம் தற்போது பீட்டா பதிப்பை பயன்படுத்தும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே சோதனைக்காக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த புதிய அம்சத்தை எப்போது தங்களின் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டா நிறுவனம் வழங்கும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

SHARE