ஜனவரியில் களமிறங்க இருக்கும் Vivo X100 Series: விலை, சிறப்பம்சங்கள் இதோ

128

 

முன்னணி Smartphone தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Vivo, தனது புதிய Vivo X100 மற்றும் Vivo X100 Pro Smartphone- களை கடந்த மாதம் நவம்பர் 2023, 14-ம் திகதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் Vivo X100 series இந்தியாவில் புதிய ஆண்டின் முதல் மாதத்தில் (ஜனவரி,2024) அறிமுகமாகும் என ஆன்லைன் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த Vivo X100 series Smartphone-களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக காணலாம்.

விலை மற்றும் சிறப்பம்சங்கள்
இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் Vivo X100 Series Variants சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய ஒளியின் ஆழத்தையும் துல்லியத்தையும் கைப்பற்றும் திறன் கொண்டவை.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Vivo X100 Smartphone Variants Android 14-அடிப்படையிலான OriginOS 4-ல் இயங்குகின்றன.

இவை Curved 6.78-inch 8 LTPO AMOLED Display மற்றும் 120Hz வரையிலான Refresh rate-ஐ கொண்டுள்ளன. மேலும் இவை Zeiss-Branded triple rear camera units-களையும் கொண்டுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய Gadget Finder website-ஆக இருக்கும் 91Mobiles, தனது புதிய அறிக்கை ஒன்றில் தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி Vivo X100 Series Smartphone-களை இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

Vivo X100 Pro மற்றும் Vivo X100 Smartphone-கள் முறையே CNY 4,999 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.56,500) மற்றும் CNY 3,999 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 50,000) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

Vivo X100 மொபைலானது 120W Fast charging support- உடன் கூடிய 5,000mAh Battery-ஐ கொண்டுள்ளது.

அதே நேரம் Vivo X100 Pro மொபைலானது 100W Fast charging மற்றும் 50W Wireless charging rate- உடன் கூடிய 5,400mAh Battery Unit-ஐ கொண்டுள்ளது.

மேலும் Vivo-ன் இந்த புதிய Flagship Smartphones புத்தம் புதிய Mediatech Dimension 9300 SoC processor உடன் வருகின்றன.

இதற்கிடையே இந்த Smartphone-கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ள Vivo-ன் உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ET Telecom சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் Vivo நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Vivo X100 Series Smartphone-களை பூடான் மற்றும் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE