இந்தியாவில் இந்த ஆண்டு குறைந்த விலையில் வெளியான சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரத்தை பற்றி பார்க்கலாம் .
IVoomi S1
iVoomi S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.1 KWH பேட்டரி பேக் வசதி, 1.6KW மோட்டார் வசதி உள்ளது. இது 55 KMPH வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் ரூ.85,000 -க்கு(ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒரு முறை ரீசார்ஜ் செய்தாலே 105KM தூரம் வரை செல்லக்கூடியது.
iVoomi S1
Gemopai Ryder Supermax
Gemopai Ryder Supermax ஸ்கூட்டரில் உள்ள BLDC Hub Motor 27KW பவர் தரும். இது அதிகபட்சமாக 60 KMPH வரையும், 100KM ரேஞ்சும் செல்லும். இந்த ஸ்கூட்டர் ரூ.79,999 -க்கு (ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
Pure EV EPluto 7G
Pure EV ePluto 7G ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி பேக் 2.5 KWH ஸ்கூட்டரை 90 முதல் 120KM ரேஞ்சு வரையும், 1.5 KW மோட்டார் 60KMPH வேகம் வரையும்செல்ல உதவும். இந்த ஸ்கூட்டர் ரூ.84,000 -க்கு (ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
Simple Dot One ஸ்கூட்டரில் உள்ள பிக்சட் 3.7KWHபேட்டரி பேக் வசதி, 8.5 KW எலக்ட்ரிக் மோட்டார், 151 KM ரேஞ்சு அதிகபட்சமாக 105 KPH வேகம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் ரூ.1,00,000 -க்கு (எக்ஸ் ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
Ola S1 X
Ola S1 X ஸ்கூட்டரானது ஓலா நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்கூட்டராகும். இதில் உள்ள 2 KWH பேட்டரி பேக், 91 கிலோமீட்டர் ரேஞ்சு, 85 KMPH வேகம் செல்லும். இந்த ஸ்கூட்டர் ரூ.90,000 -க்கு (எக்ஸ் ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.