தொழில்நுட்ப கோளாறால் பொறியாளரை தாக்கிய Tesla Robot .., அச்சத்தில் பணியாளர்கள்

156

 

டெஸ்லா நிறுவனத்தில் ரோபோ தாக்கியதில் பொறியாளர் காயமடைந்ததால் தகவல் டெக் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஒரு சம்பவம் தான் டெஸ்லா நிறுவனத்தில் நடந்துள்ளது.

ஊழியரை தாக்கிய ரோபோ
கடந்த 2021 -ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ ஒன்று பொறியாளரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஜிஹா டெக்ஸாஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று பொறியாளரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பொறியாளர் ரோபோக்களை அசெம்பிள் செய்து கொண்டிருந்த நேரத்தில், ரோபோவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொறியாளரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. கார் தொழிற்சாலைகளில் உதிரி பாகங்களை எடுக்க மற்றும் நகர்த்துவதற்கு இந்த ரோபோக்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பல தானியங்கி ரோபோக்கள் நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்ததால் இந்த செய்தி வெளியில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போது, அந்நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் எடுத்திருந்த வீடியோ வெளியாகி பரவிவருவதால் தொழில்நுட்ப பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE