இலங்கையில் இடம்பெற்றது தமிழர் மீதான அப்பட்டமான இனக்கொலை என்று தெரிந்த பின்னரும், சில தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெளத்த பேரினவாதத்தினை ஆதரித்து வருவதேன்? தமிழர்களில் பலர் தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நடந்தது என்னவென்பதுபற்றிய மிகத் தெளிவான பார்வையிருந்தபொழுதும், அப்பாதகத்தினைச் செய்த சிங்களவர்களை தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றனர். சொந்த இனம் அழிக்கப்பட்டபோதும் தமது கண்களை மூடிக்கொண்டு, அல்லது ஆரவாரித்து அப்பாதகத்தினைச் செய்தவர்களுடன் கூடி அகமகிழ்ந்த தமிழர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தமது செயலுக்கான காரணமாக பலதை முன்வைத்தபோதிலும், எல்லாவற்றிற்குமான அடிப்படை எதுவென்று ஆராய்ந்தால் சுயநலமும், தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென்கிற மிருகத்தனமும் வெளிப்படும். இந்த வெவ்வேறான தமிழர்கள் பற்றியும் அவர்கள் இதனைச் செய்வதற்கான காரணங்கள் பற்றியும் பார்க்கலாம். முதலாவது வகை, இனவழிப்பில் நேரடியாகக் கலந்துகொண்ட தமிழர்கள். புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கருணா முதல், மாற்றியக்கங்களின் தலைவர்கள் போராளிகள் ஆகியோர் இந்த வகைப்படுவர். புலிகளின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல், புலிகளின் தளபதிகளை இலக்குவைத்து தமிழர் தாயகத்தின் பகுதிகளுக்குள் ஊடுருவி கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்துதல், ராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து பொதுமக்கள் மீதான நேரடியான தாக்குதல்கள் படுகொலைகள் போன்றவற்றினை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் உட்பட்ட பல்வேறான மக்கள் விரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டனர். இவ்வாறான மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கான காரணமாக அவர்கள் முன்வைத்தவை, புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவத்துடன் இணைவதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லையென்பது. ஆனால், இவ்வாறானவர்கள், தாம் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எந்த எதிரியை எதிர்த்துப் போராடக் கிளம்பினார்களோ, இறுதியில், அந்த மக்களுக்கெதிராகவே அதே எதிரியுடன் சேர்ந்து அவர்களின் வேட்டைநாய்களாக வலம் வந்து, தமது மக்களை கொன்றுகுவிக்க நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள் என்பதுதான் உண்மை. தமிழர் தாயகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, புலிகளால் விரட்டப்பட்ட இந்தத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று, போராட்டத்திலிருந்து முற்றாக வெளியேறி, வெளிநாடு செல்வது. அல்லது புலிகளுடன் சேர்ந்து மக்களுக்காகத் தொடர்ந்தும் போராடுவது. பல முன்னாள்ப் போராளிகள் இவ்வாறு புலிகளுடன் சேர்ந்தனர் என்பது வரலாறு. ஆனால், தமிழர்களைக் கொல்லவும், துன்புறுத்தவும், போராட்டத்தை மழுங்கடிக்கவும் உதவுகிறார்கள் என்பதற்காகச் சிங்களப் பேரினவாதம் இந்த “முன்னாள்ப் போராளிகளுக்கு” ராஜமரியாதையும், அவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத சலுகைகளையும் அள்ளி வழங்கியது. ஆரம்பத்தில் புலிகளைக் காரணம் காட்டி ராணுவத்துடன் இணைந்தவர்கள், ஒருகட்டத்தில், ராணுவத்தினால் கிடைக்கப்பெற்ற சலுகைகளைப் பார்த்தவுடன் தொடர்ந்தும் தமிழருக்கெதிராகச் செயற்படுவதில் தீவிரம் காட்டினார்கள். கருணா, டக்கிளஸ் ஆகியோர் உற்பட பல தமிழ்ப் போராளிகள், இன்றுவரை, புலிகள் இல்லாத பொழுதிலும் கூட ராணுவத்தின் அக்கிரமங்களை, திட்டமிட்ட தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பை ஆதரிப்பதோடு, இன்றுவரை சிங்களப் பெளத்த பேரினவாதம் தமிழர்மேல் நடத்திய போர்க்குற்றங்களையும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையும் மறைத்து, மறுத்தே வருகின்றனர். ஆக, புலிகளிடமிருந்து தமக்கான பாதுகாப்பிற்காகவே தாம் அரசுடன் இணைந்தோம் என்கிற இவர்களின் சப்பைக் கட்டல்கள் அடிபட்டுப் போய்விடுகிறது. அடுத்தவகையினர், புலிகளின் செயற்பாடுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள். இவர்களுள், மாற்றியக்கப் போராளிகள், அவர்களின் குடும்பத்தினர், அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள், தமது பிள்ளைகளைப் புலிகளிடம் கட்டாயப் பயிற்சிக்கு மனமின்றிக் கொடுத்தவர்கள் ஆகியோரைக் குறிப்பிட முடியும். இந்திய உளவுத்துறையின் பிரித்தாளும் தந்திரத்தால் பல தமிழ்ப் போராளிக் குழுக்கள் தமக்குள் மோதிவந்த காலத்தில், இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் அகப்படாமல் இருந்துவந்த புலிகளியக்கத்திற்கும் இந்திய உளவுத்துறையின் கட்டளைகளின்படி செயற்பட்ட மற்றைய இயக்கங்களுக்கும் இடையே ஆயுத வன்முறை வெடித்த காலத்தில், பல மாற்றியக்கப் போராளிகள் இயக்கச் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கும்படி வற்புறுத்தப்பட்டனர் தொடர்ந்தும் எதிர்த்துப் போராடியவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். தொடர்ந்தும் போராட முடியாத சூழ்நிலையினாலும், இலங்கை ராணுவத்துடன் சேர்வதென்பது அவர்களால் நினைத்தும் பார்க்கமுடியாத ஒரு துரோகமாக அவர்கள் கருதியதனாலும், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறானவர்கள், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் புலிகளின் தோல்வியினை ஆதரித்தார்கள். ராணுவத்தின் வெற்றியை வரவேற்ற இந்த முன்னாள்ப் போராளிகள், ராணுவத்தின் வெற்றியென்பது, தமிழர்களின் ஒட்டுமொத்த அழிவோடு சம்பந்தப்பட்டதென்பதை பார்க்க மறந்ததுடன், புலிகள் தோற்பதையும், ராணுவம் வெல்வதையும் மனதார விரும்பினர். அதேபோல, தமது பிள்ளைகள், உறவினர்கள் புலிகளால் கொல்லப்பட்டதை, இயக்கங்களிலிருந்து அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்டதை சகித்துக்கொள்ளமுடியாத மாற்றியக்கப் போராளிகளின் பெற்றோர்களும் உறவினர்களும். இவர்களைப் பொறுத்தவரை, புலிகளுக்கும் தமக்குமான பகை தனிப்பட்ட ரீதியிலானது. இதற்கிடையே தமிழரின் அழிவோ, இருப்போ ஒரு பொருட்டாக வருவதை இவர்கள் அனுமதிக்கவில்லை. புலிகள் அழிவதே இவர்களின் ஒரே விருப்பமாக இருந்தபொழுது, புலிகளுடன் சேர்ந்துநின்ற தமிழர்கள் கொல்லப்பட்டது இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. “புலிகளை ஆதரித்தால் அழிவுதான் மிஞ்சும்” என்பதும், தமது பிள்ளைகளைக் கொன்ற புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற வன்மமும் மேலிட்டு இவர்கள் தமிழர்களின் அழிவைக் கடந்துசென்றுவிட்டனர். மூன்றாவது வகையினர் ஆயுதப் போராட்டம் பரிணமிக்கும் முன்னர் தமிழரின் அரசியலைக் கையிலெடுத்திருந்த அரசியல்வாதிகள். குறிப்பாகச் சொல்வதானால், சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளுடன் சேர்ந்தியங்கிய தமிழ் அரசியல்வாதிகள், தமிழர் தாயகத்தில் மிகப் பலம்பொருந்திய கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி மற்றும் அதன் வழிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள். சிங்களப் பேரினவாதத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதனது ஏஜெண்ட்டுகளாக தமிழர் தாயகத்தில் செயற்பட்ட தமிழ் அரசியல்வாதிகளை மக்களே வெறுத்தபொழுது, போராளிகளின் இலக்காக இவர்கள் வந்தது பலருக்கும் ஒரு வியப்பாக இருக்கவில்லை. ஆனால், தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளின் தலைவர்களின் அரசியல் வீராவேசப் பேச்சுக்களினாலும், உந்துதலினாலும் ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளப்பட்ட பல தமிழ் இளைஞர்கள், இந்த அரசியல்வாதிகளின் சொல்லிற்கும் செயலுக்குமிடையே எதுவித தொடர்பும் இல்லாததை அறிந்தபொழுது, இவர்களுக்கெதிராகச் செயற்படத் தொடங்கினர். ஆளாள சுந்தரம், தர்மலிங்கம் ஆகிய அரசியல்வாதிகள் புலிகளல்லாத இயக்கமொன்றினாலும், 1989 இல் கூட்டணியின் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் போன்றவர்கள் புலிகளாலும் கொல்லப்பட்டனர். தமது சொந்த மக்களைவிட இந்தியாவையே நம்பி அரசியல் செய்தமையினாலும், இந்தியப்படையின் அக்கிரமங்களை மறைத்து, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து “வெற்றிமாலை” எனும் ராணுவ ஒலிபரப்பில் தொடர்ச்சியாகக்கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து, இந்திய உளவுத்துறையின் திட்டத்தின்படி செயற்பட்டதனாலும் , மக்களை ஏமாற்றியதாலும் அமிர் மற்றும் யோகேஸ்வரன் போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே, இவர்களின் கட்சியின் இன்றைய தலைவர்கள், ஆதரவாளர்கள் உற்பட பல கட்சி உறுப்பினர்கள் புலிகளுக்கெதிரான பார்வையைக் கொண்டிருப்பதுடன், புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். இன்று தமிழர் தேசிய கூட்டணியினை ஆளும் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் புலிகளுக்கெதிராக வெளிப்படையான கொள்கையினைக் கொண்டிருப்பதோடு, போர்க்குற்றங்களுக்கெதிரான விசாரணைகளை மழுங்கடிக்கச் செய்வதில் இந்தியா மற்றும் சிங்களப் பேரினவாதிகளுடன் சேர்ந்தே செயற்படுகின்றனர். நான்காவதும் இறுதியுமான வகையினர், தமிழர் தாயகத்திற்கு வெளியே, போராட்டத்துடன் எதுவித தொடர்புமற்று, தென்னிலங்கையின் செல்வச்செழிப்பில் வாழ்ந்துகொண்டு சுத்தமான சுயநலத்தால் உந்தப்பட்டு, தாம் வாழ்ந்தால் மட்டும் போதும் என்கிற மனப்பாங்குடனும், சிங்களவர்கள் தம்மைக் கண்ணின் மணிபோலக் காக்கிறார்கள் எனும் கனவுலகில் வாழும் “தெமழர்கள்”. இவர்களில் பலருக்கு தமிழர் தாயகமே பூர்வீகமாக இருந்தாலும்கூட, தம்மை தமிழர் என்று காட்டிக் கொள்வதில் பின்னிற்பவர்கள். தமிழை, தமிழ்த் தேசியத்தினை ஆதரித்தால், “தமிழர்க்கு எதிரானவன்” என்று அவர்கள் இன்றுவரை சிங்களவரிடையே கட்டிவந்த விம்பம் உடைந்துவிடும் என்று கவலைப்படும் தமிழர்கள். தனது சொந்த இனத்தின் அழிவுகளைப் பார்க்க விருப்பமில்லாது, கண்களையும், காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு, சிங்களப் பேரினவாதிகளின் செய்திகளை நம்பி வாழும் மனிதர்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரம், ரெண்டாயிரம் புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று ராணுவம் கூறியபோது, சிங்களவரோடு சேர்ந்து மகிழ்ந்து, அதைக் கொண்டாடியும், தமிழர்களில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று சிங்களம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தபோது, அதனை உண்மைதான் என்று கற்பூரத்தினை அணைத்து சத்தியம் செய்தும் தமது விசுவாசத்தினைக் காட்டிய தமிழர்கள். இன்றுவரை தமிழர்மேல் சிங்கள பெளத்த பேரினவாதம் நடத்திய போர்க்குற்றங்களை மறைத்து, பல பொதுத் தளங்களில் (கோரா உற்பட) எழுதிவரும் இவர்கள், மிகச் சுயநலமானவர்கள். தமிழரின் கலாசராத்தினை எள்ளிநகையாடி, அதன்மேல் சேறுபூசி, திராவிடம், பெரியார், தமிழரின் உணவுமுறைகள், தமிழரின் இருப்பிற்கான போராட்டம் போன்றவற்றினைக் கொச்சைப்படுத்தி தம்மை தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின விசுவாசிகளாக, சிங்களத்தின் தமிழ்க் காவலர்களாகக் காட்டும் தமிழர்கள் இவர்கள். தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று சிங்களம் தொடர்ந்தும் கூறி, தனது இனக்கொலையினை நியாயப்படுத்துவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் இந்தத் தமிழர்கள் மிகவும் குரூர குணமும், தனது இனம்பற்றிய கடுகளவு கரிசணையும் இல்லாத சுயநலப் பதர்கள். ஜனநாயகவாதிகள், சிங்களத்தின் காவலர்கள் என்று இவர்கள் போடும் வேஷம் பேரினவாதிகளைக் குளிர்விப்பதால் அவர்கள் தொடர்ந்தும் ஆடுகிறார்கள். இவர்கள் ஒருபோதுமே தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தவோ அல்லது அவர்கள் பற்றிப் பேசவோ அருகதையில்லாதவர்கள். இறுதியாக, மலையகத்தில் வாழும் தமிழர்கள். இவர்களைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நியாயமானதாகவே இருந்தது. போராளிகளுக்கு உதவினார்கள் என்று பல மலையகத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதையாக்கப்பட்டுள்ளார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 1983 இல் மலையகத்தில் சிங்களம் ஆடிய படுகொலைகள் இவர்களின் தமிழர் போராட்டைத்திற்கான ஆதரவுக்காகவன்றி, தமிழர்கள் என்பதாலேயே நடத்தப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் அமைவோடு, ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிந்து தனியே அரசியல் செய்ய ஆரம்பித்தபோது இவர்கள் தம்மை அந்நியப்படுத்திக் கொண்டார்கள். போராட்டத்திற்கான தார்மீக ஆதரவென்பது இருந்தபோதிலும், மலையக இளைஞர்கள் மிகவும் குறைந்தளவிலேயே போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். ஆகவே, மலையகத் தமிழரிடையே தமிழரின் போராட்டத்திற்கெதிரான நிலைப்பாடென்பதும், இடம்பெற்ற அழிவுகளை நியாயப்படுத்தும் நிலைப்பாடென்பது நான் அறியாதது. ஆனால், இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்தின்பின்னரே இவ்வாறான நிலைப்பாடு இருக்கிறதென்பதை நான் உணர்கிறேன். தமிழர்கள் முகம்கொடுத்த படுகொலைகளையும், அழிவுகளையும் நியாயப்படுத்த பிரதேசவாத கருத்துக்களைப் பரப்பிவரும் ஒரு சில மலையகத் தமிழர்களின் உண்மையான கோபம் என்பது, மேற்குலகில் வாழும் ஈழத்தமிழர்கள் தமது சமூகத்திற்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லையென்பதுடன் ஆரம்பிக்கிறது. ஆனால், மலையகத்தில் வறுமையின் கீழ் வாழ்ந்தாலும், உயிருக்கான உத்தரவாதம் இருப்பதும், இன்றுவரை இந்தியாவுடன் தமக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதும் போல, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எவருமே இல்லையென்பதும், தமிழர் தாயகத்தில் இரண்டுவருடத்தினுள்ளேயே லட்சக்கணக்கான தமிழர்கள் சிங்களத்தால் கொன்றுகுவிக்கப்பட்டார்கள் என்பதும், இன்றுவரை அத்தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்க்கையினையே வாழ்கிறார்கள் என்பதையும் இந்த மலையகத் தமிழர் பார்ப்பதில்லை. தொடர்ச்சியான சிங்கள அரசுகளுக்கு முண்டுகொடுத்து, தமது ஆசனங்களையும், பைகளையும் நிரப்பிவரும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிமீது விமர்சனங்களை முன்வைக்க மறுக்கும் இத்தமிழர்கள், போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், ஈழத்தமிழர்கள் பிரதேசவாதிகள் என்றும் கூறுவது, உண்மையாகவே வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈழத்தமிழரின் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட மன உளைச்சலினாலன்றி வேறேதுவுமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஈழத்தமிழர் மேல் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை இவர்கள் மறைப்பதற்கும் மேற்குலக தமிழர்கள் தமக்கு உதவவில்லை என்று இவர்கள் கூறும் காரணத்திற்குமிடையிலான தொடர்பினை இவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

197

 

தமிழர்களில் பலர் தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நடந்தது என்னவென்பதுபற்றிய மிகத் தெளிவான பார்வையிருந்தபொழுதும், அப்பாதகத்தினைச் செய்த சிங்களவர்களை தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றனர். சொந்த இனம் அழிக்கப்பட்டபோதும் தமது கண்களை மூடிக்கொண்டு, அல்லது ஆரவாரித்து அப்பாதகத்தினைச் செய்தவர்களுடன் கூடி அகமகிழ்ந்த தமிழர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தமது செயலுக்கான காரணமாக பலதை முன்வைத்தபோதிலும், எல்லாவற்றிற்குமான அடிப்படை எதுவென்று ஆராய்ந்தால் சுயநலமும், தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென்கிற மிருகத்தனமும் வெளிப்படும்.

இந்த வெவ்வேறான தமிழர்கள் பற்றியும் அவர்கள் இதனைச் செய்வதற்கான காரணங்கள் பற்றியும் பார்க்கலாம்.

முதலாவது வகை, இனவழிப்பில் நேரடியாகக் கலந்துகொண்ட தமிழர்கள். புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கருணா முதல், மாற்றியக்கங்களின் தலைவர்கள் போராளிகள் ஆகியோர் இந்த வகைப்படுவர். புலிகளின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல், புலிகளின் தளபதிகளை இலக்குவைத்து தமிழர் தாயகத்தின் பகுதிகளுக்குள் ஊடுருவி கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்துதல், ராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து பொதுமக்கள் மீதான நேரடியான தாக்குதல்கள் படுகொலைகள் போன்றவற்றினை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் உட்பட்ட பல்வேறான மக்கள் விரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டனர்.

இவ்வாறான மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கான காரணமாக அவர்கள் முன்வைத்தவை, புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவத்துடன் இணைவதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லையென்பது. ஆனால், இவ்வாறானவர்கள், தாம் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எந்த எதிரியை எதிர்த்துப் போராடக் கிளம்பினார்களோ, இறுதியில், அந்த மக்களுக்கெதிராகவே அதே எதிரியுடன் சேர்ந்து அவர்களின் வேட்டைநாய்களாக வலம் வந்து, தமது மக்களை கொன்றுகுவிக்க நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள் என்பதுதான் உண்மை.

தமிழர் தாயகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, புலிகளால் விரட்டப்பட்ட இந்தத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று, போராட்டத்திலிருந்து முற்றாக வெளியேறி, வெளிநாடு செல்வது. அல்லது புலிகளுடன் சேர்ந்து மக்களுக்காகத் தொடர்ந்தும் போராடுவது. பல முன்னாள்ப் போராளிகள் இவ்வாறு புலிகளுடன் சேர்ந்தனர் என்பது வரலாறு. ஆனால், தமிழர்களைக் கொல்லவும், துன்புறுத்தவும், போராட்டத்தை மழுங்கடிக்கவும் உதவுகிறார்கள் என்பதற்காகச் சிங்களப் பேரினவாதம் இந்த “முன்னாள்ப் போராளிகளுக்கு” ராஜமரியாதையும், அவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத சலுகைகளையும் அள்ளி வழங்கியது. ஆரம்பத்தில் புலிகளைக் காரணம் காட்டி ராணுவத்துடன் இணைந்தவர்கள், ஒருகட்டத்தில், ராணுவத்தினால் கிடைக்கப்பெற்ற சலுகைகளைப் பார்த்தவுடன் தொடர்ந்தும் தமிழருக்கெதிராகச் செயற்படுவதில் தீவிரம் காட்டினார்கள். கருணா, டக்கிளஸ் ஆகியோர் உற்பட பல தமிழ்ப் போராளிகள், இன்றுவரை, புலிகள் இல்லாத பொழுதிலும் கூட ராணுவத்தின் அக்கிரமங்களை, திட்டமிட்ட தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பை ஆதரிப்பதோடு, இன்றுவரை சிங்களப் பெளத்த பேரினவாதம் தமிழர்மேல் நடத்திய போர்க்குற்றங்களையும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையும் மறைத்து, மறுத்தே வருகின்றனர். ஆக, புலிகளிடமிருந்து தமக்கான பாதுகாப்பிற்காகவே தாம் அரசுடன் இணைந்தோம் என்கிற இவர்களின் சப்பைக் கட்டல்கள் அடிபட்டுப் போய்விடுகிறது.

அடுத்தவகையினர், புலிகளின் செயற்பாடுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள். இவர்களுள், மாற்றியக்கப் போராளிகள், அவர்களின் குடும்பத்தினர், அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள், தமது பிள்ளைகளைப் புலிகளிடம் கட்டாயப் பயிற்சிக்கு மனமின்றிக் கொடுத்தவர்கள் ஆகியோரைக் குறிப்பிட முடியும்.

இந்திய உளவுத்துறையின் பிரித்தாளும் தந்திரத்தால் பல தமிழ்ப் போராளிக் குழுக்கள் தமக்குள் மோதிவந்த காலத்தில், இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் அகப்படாமல் இருந்துவந்த புலிகளியக்கத்திற்கும் இந்திய உளவுத்துறையின் கட்டளைகளின்படி செயற்பட்ட மற்றைய இயக்கங்களுக்கும் இடையே ஆயுத வன்முறை வெடித்த காலத்தில், பல மாற்றியக்கப் போராளிகள் இயக்கச் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கும்படி வற்புறுத்தப்பட்டனர் தொடர்ந்தும் எதிர்த்துப் போராடியவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். தொடர்ந்தும் போராட முடியாத சூழ்நிலையினாலும், இலங்கை ராணுவத்துடன் சேர்வதென்பது அவர்களால் நினைத்தும் பார்க்கமுடியாத ஒரு துரோகமாக அவர்கள் கருதியதனாலும், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறானவர்கள், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் புலிகளின் தோல்வியினை ஆதரித்தார்கள். ராணுவத்தின் வெற்றியை வரவேற்ற இந்த முன்னாள்ப் போராளிகள், ராணுவத்தின் வெற்றியென்பது, தமிழர்களின் ஒட்டுமொத்த அழிவோடு சம்பந்தப்பட்டதென்பதை பார்க்க மறந்ததுடன், புலிகள் தோற்பதையும், ராணுவம் வெல்வதையும் மனதார விரும்பினர்.

அதேபோல, தமது பிள்ளைகள், உறவினர்கள் புலிகளால் கொல்லப்பட்டதை, இயக்கங்களிலிருந்து அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்டதை சகித்துக்கொள்ளமுடியாத மாற்றியக்கப் போராளிகளின் பெற்றோர்களும் உறவினர்களும். இவர்களைப் பொறுத்தவரை, புலிகளுக்கும் தமக்குமான பகை தனிப்பட்ட ரீதியிலானது. இதற்கிடையே தமிழரின் அழிவோ, இருப்போ ஒரு பொருட்டாக வருவதை இவர்கள் அனுமதிக்கவில்லை. புலிகள் அழிவதே இவர்களின் ஒரே விருப்பமாக இருந்தபொழுது, புலிகளுடன் சேர்ந்துநின்ற தமிழர்கள் கொல்லப்பட்டது இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. “புலிகளை ஆதரித்தால் அழிவுதான் மிஞ்சும்” என்பதும், தமது பிள்ளைகளைக் கொன்ற புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற வன்மமும் மேலிட்டு இவர்கள் தமிழர்களின் அழிவைக் கடந்துசென்றுவிட்டனர்.

மூன்றாவது வகையினர் ஆயுதப் போராட்டம் பரிணமிக்கும் முன்னர் தமிழரின் அரசியலைக் கையிலெடுத்திருந்த அரசியல்வாதிகள். குறிப்பாகச் சொல்வதானால், சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளுடன் சேர்ந்தியங்கிய தமிழ் அரசியல்வாதிகள், தமிழர் தாயகத்தில் மிகப் பலம்பொருந்திய கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி மற்றும் அதன் வழிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள்.

சிங்களப் பேரினவாதத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதனது ஏஜெண்ட்டுகளாக தமிழர் தாயகத்தில் செயற்பட்ட தமிழ் அரசியல்வாதிகளை மக்களே வெறுத்தபொழுது, போராளிகளின் இலக்காக இவர்கள் வந்தது பலருக்கும் ஒரு வியப்பாக இருக்கவில்லை. ஆனால், தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளின் தலைவர்களின் அரசியல் வீராவேசப் பேச்சுக்களினாலும், உந்துதலினாலும் ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளப்பட்ட பல தமிழ் இளைஞர்கள், இந்த அரசியல்வாதிகளின் சொல்லிற்கும் செயலுக்குமிடையே எதுவித தொடர்பும் இல்லாததை அறிந்தபொழுது, இவர்களுக்கெதிராகச் செயற்படத் தொடங்கினர். ஆளாள சுந்தரம், தர்மலிங்கம் ஆகிய அரசியல்வாதிகள் புலிகளல்லாத இயக்கமொன்றினாலும், 1989 இல் கூட்டணியின் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் போன்றவர்கள் புலிகளாலும் கொல்லப்பட்டனர். தமது சொந்த மக்களைவிட இந்தியாவையே நம்பி அரசியல் செய்தமையினாலும், இந்தியப்படையின் அக்கிரமங்களை மறைத்து, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து “வெற்றிமாலை” எனும் ராணுவ ஒலிபரப்பில் தொடர்ச்சியாகக்கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து, இந்திய உளவுத்துறையின் திட்டத்தின்படி செயற்பட்டதனாலும் , மக்களை ஏமாற்றியதாலும் அமிர் மற்றும் யோகேஸ்வரன் போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஆகவே, இவர்களின் கட்சியின் இன்றைய தலைவர்கள், ஆதரவாளர்கள் உற்பட பல கட்சி உறுப்பினர்கள் புலிகளுக்கெதிரான பார்வையைக் கொண்டிருப்பதுடன், புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். இன்று தமிழர் தேசிய கூட்டணியினை ஆளும் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் புலிகளுக்கெதிராக வெளிப்படையான கொள்கையினைக் கொண்டிருப்பதோடு, போர்க்குற்றங்களுக்கெதிரான விசாரணைகளை மழுங்கடிக்கச் செய்வதில் இந்தியா மற்றும் சிங்களப் பேரினவாதிகளுடன் சேர்ந்தே செயற்படுகின்றனர்.

நான்காவதும் இறுதியுமான வகையினர், தமிழர் தாயகத்திற்கு வெளியே, போராட்டத்துடன் எதுவித தொடர்புமற்று, தென்னிலங்கையின் செல்வச்செழிப்பில் வாழ்ந்துகொண்டு சுத்தமான சுயநலத்தால் உந்தப்பட்டு, தாம் வாழ்ந்தால் மட்டும் போதும் என்கிற மனப்பாங்குடனும், சிங்களவர்கள் தம்மைக் கண்ணின் மணிபோலக் காக்கிறார்கள் எனும் கனவுலகில் வாழும் “தெமழர்கள்”.

இவர்களில் பலருக்கு தமிழர் தாயகமே பூர்வீகமாக இருந்தாலும்கூட, தம்மை தமிழர் என்று காட்டிக் கொள்வதில் பின்னிற்பவர்கள். தமிழை, தமிழ்த் தேசியத்தினை ஆதரித்தால், “தமிழர்க்கு எதிரானவன்” என்று அவர்கள் இன்றுவரை சிங்களவரிடையே கட்டிவந்த விம்பம் உடைந்துவிடும் என்று கவலைப்படும் தமிழர்கள். தனது சொந்த இனத்தின் அழிவுகளைப் பார்க்க விருப்பமில்லாது, கண்களையும், காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு, சிங்களப் பேரினவாதிகளின் செய்திகளை நம்பி வாழும் மனிதர்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரம், ரெண்டாயிரம் புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று ராணுவம் கூறியபோது, சிங்களவரோடு சேர்ந்து மகிழ்ந்து, அதைக் கொண்டாடியும், தமிழர்களில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று சிங்களம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தபோது, அதனை உண்மைதான் என்று கற்பூரத்தினை அணைத்து சத்தியம் செய்தும் தமது விசுவாசத்தினைக் காட்டிய தமிழர்கள். இன்றுவரை தமிழர்மேல் சிங்கள பெளத்த பேரினவாதம் நடத்திய போர்க்குற்றங்களை மறைத்து, பல பொதுத் தளங்களில் (கோரா உற்பட) எழுதிவரும் இவர்கள், மிகச் சுயநலமானவர்கள். தமிழரின் கலாசராத்தினை எள்ளிநகையாடி, அதன்மேல் சேறுபூசி, திராவிடம், பெரியார், தமிழரின் உணவுமுறைகள், தமிழரின் இருப்பிற்கான போராட்டம் போன்றவற்றினைக் கொச்சைப்படுத்தி தம்மை தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின விசுவாசிகளாக, சிங்களத்தின் தமிழ்க் காவலர்களாகக் காட்டும் தமிழர்கள் இவர்கள். தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று சிங்களம் தொடர்ந்தும் கூறி, தனது இனக்கொலையினை நியாயப்படுத்துவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் இந்தத் தமிழர்கள் மிகவும் குரூர குணமும், தனது இனம்பற்றிய கடுகளவு கரிசணையும் இல்லாத சுயநலப் பதர்கள். ஜனநாயகவாதிகள், சிங்களத்தின் காவலர்கள் என்று இவர்கள் போடும் வேஷம் பேரினவாதிகளைக் குளிர்விப்பதால் அவர்கள் தொடர்ந்தும் ஆடுகிறார்கள். இவர்கள் ஒருபோதுமே தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தவோ அல்லது அவர்கள் பற்றிப் பேசவோ அருகதையில்லாதவர்கள்.

இறுதியாக, மலையகத்தில் வாழும் தமிழர்கள். இவர்களைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நியாயமானதாகவே இருந்தது. போராளிகளுக்கு உதவினார்கள் என்று பல மலையகத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதையாக்கப்பட்டுள்ளார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 1983 இல் மலையகத்தில் சிங்களம் ஆடிய படுகொலைகள் இவர்களின் தமிழர் போராட்டைத்திற்கான ஆதரவுக்காகவன்றி, தமிழர்கள் என்பதாலேயே நடத்தப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் அமைவோடு, ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிந்து தனியே அரசியல் செய்ய ஆரம்பித்தபோது இவர்கள் தம்மை அந்நியப்படுத்திக் கொண்டார்கள். போராட்டத்திற்கான தார்மீக ஆதரவென்பது இருந்தபோதிலும், மலையக இளைஞர்கள் மிகவும் குறைந்தளவிலேயே போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். ஆகவே, மலையகத் தமிழரிடையே தமிழரின் போராட்டத்திற்கெதிரான நிலைப்பாடென்பதும், இடம்பெற்ற அழிவுகளை நியாயப்படுத்தும் நிலைப்பாடென்பது நான் அறியாதது. ஆனால், இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்தின்பின்னரே இவ்வாறான நிலைப்பாடு இருக்கிறதென்பதை நான் உணர்கிறேன்.

தமிழர்கள் முகம்கொடுத்த படுகொலைகளையும், அழிவுகளையும் நியாயப்படுத்த பிரதேசவாத கருத்துக்களைப் பரப்பிவரும் ஒரு சில மலையகத் தமிழர்களின் உண்மையான கோபம் என்பது, மேற்குலகில் வாழும் ஈழத்தமிழர்கள் தமது சமூகத்திற்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லையென்பதுடன் ஆரம்பிக்கிறது. ஆனால், மலையகத்தில் வறுமையின் கீழ் வாழ்ந்தாலும், உயிருக்கான உத்தரவாதம் இருப்பதும், இன்றுவரை இந்தியாவுடன் தமக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதும் போல, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எவருமே இல்லையென்பதும், தமிழர் தாயகத்தில் இரண்டுவருடத்தினுள்ளேயே லட்சக்கணக்கான தமிழர்கள் சிங்களத்தால் கொன்றுகுவிக்கப்பட்டார்கள் என்பதும், இன்றுவரை அத்தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்க்கையினையே வாழ்கிறார்கள் என்பதையும் இந்த மலையகத் தமிழர் பார்ப்பதில்லை. தொடர்ச்சியான சிங்கள அரசுகளுக்கு முண்டுகொடுத்து, தமது ஆசனங்களையும், பைகளையும் நிரப்பிவரும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிமீது விமர்சனங்களை முன்வைக்க மறுக்கும் இத்தமிழர்கள், போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், ஈழத்தமிழர்கள் பிரதேசவாதிகள் என்றும் கூறுவது, உண்மையாகவே வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈழத்தமிழரின் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட மன உளைச்சலினாலன்றி வேறேதுவுமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஈழத்தமிழர் மேல் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை இவர்கள் மறைப்பதற்கும் மேற்குலக தமிழர்கள் தமக்கு உதவவில்லை என்று இவர்கள் கூறும் காரணத்திற்குமிடையிலான தொடர்பினை இவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

SHARE