பெண்களுக்கு யாரை பிடிக்கும்

432
ஸ்வீட்டான பையன்

அமைதியான, தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டு நடத்துகின்ற ,திறந்த மனதுடைய, வெளியில் கூட்டி செல்கின்ற, செலவுக்கு பணம் தருகின்ற, பேஸ்புக் ட்விட்டரில் தனது துணையை பற்றி புகழ்கின்ற, பொதுவில் அன்பானவனாக காட்டிக்கொள்ளும் ,ஒவ்வொரு சண்டையிலும் பெண்ணை வெல்ல அனுமதிக்கின்ற,

அவள் சொல்லும் அனைத்தையும் ஆமோதிக்கின்ற, உறவுக்கு பாதகமான நபர்களுடன் தொடர்புகளை துண்டிக்க சொல்லும் போது அதனை செய்வனே செய்கின்ற, நண்பர்களுடன் அதிகநேரம் செலவு செய்யாமல் அவளுடனேயே இருக்கின்ற, அவளின் நண்பிகள் “இவன் தான் உனக்கு பொருத்தமானவன்” என்று கூறும்படி நடக்கின்ற பையனை தான் “ஸ்வீட்டான பையன்” என்கிறார்கள் பெண்கள்.

இதனுள் இன்னும் பல உதாரணங்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

கெட்ட பையன்

மிக கடுமையான நடத்தையை கொண்ட, கொடூரமான சிந்தனை கொண்ட, கோபக்கார, பெண்ணை வெளியில் எங்கும் கூட்டி செல்லாத,  செய்து பொதுவில் ஒன்று சேர நடக்காத, கை கோர்க்காத, அவன் செலவுக்கெல்லாம் தான் பணம் செலவு செய்யணும் என்கின்ற,துணையின் பிறந்த நாளைக்கூட ஞாபகம் வைத்திருக்காத,

நண்பர்களுடன் கூத்தாடுகின்ற, அவளை விட நண்பர்கள் தான் முக்கியம் என்று நினைக்கின்ற, புகை,குடி, என்று ஆர்ப்பரிக்கின்ற,அவளின் நண்பிகளின் மனதை வெல்லாத, எந்தக் கருத்துக்கும் எதிராக கதைக்கின்ற, தானே தனியே தீர்மானம் எடுக்கின்ற எந்த ஒரு ஆணும் பெண் பார்வையில் கெட்ட பையன் தான்.

இந்த “கெட்ட பையன்” என்பதன் “பார்வை” ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒரு பெண் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் வாழ்க்கையை கொண்டு நடத்துகிறாள் என்பதிலேயே நல்ல பையன், கெட்ட பையன் தொடர்பிலான அவளது பார்வை வேறுபடுகிறது.

ஒருவளுக்கு கெட்ட பையனாக இருக்கும் ஒருவன் அவள் அவனிடம் வெறுக்கும் விடயங்களை அனுசரித்து போகும் ஒரு பெண்ணிடம் நல்ல பையனாகிறான்.

SHARE