போன் வாங்க போறீங்களா.., ஆண்டின் முதல் 7 நாள்களில் இடம்பிடித்த Top 10 ஸ்மார்ட் போன்கள்

119

 

2024ம் ஆண்டின் ஜனவரி 1 முதல் 7 ம் திகதி வரை இடம் பெற்றுள்ள டாப் 10 ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

Samsung Galaxy S24 Ultra
Samsung நிறுவனத்தின் Flagship ஸ்மார்ட்போனான Galaxy S24 Ultra 2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஜனவரி 17 -ம் திகதி அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில், S24 சீரில் எல்லா மாடலும் LTPO Panel display இருக்கும் எனவும், S24 Ultra போலவே S24+ மாடலும் Snapdragon 8 Gen 3 சிப்செட் இருக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Samsung Galaxy S23 Ultra
Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட் போனானது 2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் 5 -ம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் S24 series போன் அறிமுகம் ஆக போவதையே சார்ந்தது. இந்த போனிற்கு Samsung அளித்திருக்கும் சலுகையை பயன்படுத்தி பலரும் இதனை வாங்குகின்றனர்.

Samsung Galaxy A54
Samsung Galaxy A54 ஸ்மார்ட் போனானது 2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் 4 -ம் இடத்தை பிடித்துள்ளது. இது வெளிவந்து ஓராண்டு ஆனாலும் பலரும் இதனை வாங்குகின்றனர். அமேசானின் இதன் விலை ரூ.36,000-ல் விற்பனை ஆகி வருகிறது.

Xiaomi Redmi Smartphones
2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் Note 13 Pro ஸ்மார்ட் போன் 2 -ம் இடத்திலும், Note 13 Pro+ ஸ்மார்ட் போன் 3 -ம் இடத்திலும், Note 13 ஸ்மார்ட் போன் 7 -ம் இடத்திலும், Note 12 ஸ்மார்ட் போன் 8 -ம் இடத்திலும், Note 13c ஸ்மார்ட் போன் 10 -ம் இடத்திலும் உள்ளது.

IPhone 15 Pro
Apple iPhone 15 Pro 2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் 9 -ம் இடத்தை பிடித்துள்ளது. இது வெளிவந்த போது பல சர்ச்சையை சந்தித்தாலும் ஆர்வமுடன் பலரும் வாங்குகின்றனர்.

SHARE