IPhone 15 போன் வாங்க போறீங்களா.. இது தான் சரியான நேரம்: திடீரென தள்ளுபடி அறிவிப்பு

152

 

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய iPhone 15-ஐ வாங்குவோருக்கு சில தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

Iphone 15 Series
ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோனுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஐபோனின் புதிய மாடல் அறிமுகமாகும் பொழுது அதனை ஆர்வமுடன் வாங்கும் கூட்டம் எப்போதும் உண்டு. அந்தவகையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் iphone 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

iphone 15 series offers in flipkart

இது விற்பனைக்கு வந்த ஒருவாரத்திலேயே பெருமளவில் விற்று நல்ல வரவேற்பை பெற்றது. iphone 15 மாடலின் 128 GB விலை ரூ.79, 990 என்றும், 256 GB விலை ரூ.89,900 என்றும், 512 GB விலை ரூ.1,09,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

தள்ளுபடி விலையில் IPhone 15
இந்நிலையில், iPhone 15 சீரிஸ் அறிமுகமாகி சில மாதங்களாகி இருக்கும் நிலையில். ரூ.79,900-ஆக நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஃப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. iPhone 15 போனை சில பேங்க் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வாங்கினால் Flipkart-ல் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், Exchange offers மற்றும் No-cost EMI ஆப்ஷன்களும் உள்ளன. இந்த மொபைலில் Dynamic Island அம்சம், 48 Megapixel wide angle camera, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் அடங்கிய டூயல் ரியர் கேமரா ஆகியவை உள்ளன.

இதனிடையே, iphone 15 மாடலின் 128 GB விலை Flipkart-ல் ரூ.73,999-க்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ரூ.4,000 கேஷ்பேக் வழங்குகிறது.

இதன்மூலம், iPhone 15-ஐ ரூ.69,999 என்ற விலையில் வாங்கலாம். இதனைத்தவிர EMI ஆப்ஷன்கள் மாதத்திற்கு ரூ.12,334 என்ற விலையில் தொடங்குகின்றன.

SHARE