புதிய Selfie King., 32MP முன் கமெராவுடன் வெளியான Oppo Reno 11 Series

163

 

Oppo நிறுவனம் இந்திய சந்தையில் அதன் Reno 11 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் Oppo Reno 11 மற்றும் Oppo Reno 11 Pro ஆகிய இரண்டு மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Reno 11 மொபைலில் 32 மெகாபிக்சல் Selfie Camera, 50MP பின்புற Camera, 256 GB வரை Storage, 5000 MAH Battery, 67 watt fast charging போன்ற பல அம்சங்கள் உள்ளன. இந்த மொபைலின் விலை மற்றும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

OPPO Reno 11 விவரக்குறிப்புகள்
நிறுவனம் 6.7 inch AMOLED பேனலை வழங்குகிறது, இது 120Hz Refresh Rate, 20:9 aspect ratio, 2412 x 1080 pixels resolution, 950 nits peak brightness மற்றும் HDR10 Plus ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Reno 11 இந்திய மாடல் MediaTek Dimensity 7050 chipset மூலம் இயக்கப்படுகிறது. மேலும் Mali G68 MC4 GPU Graphics உள்ளது.

OS பொறுத்தவரை, Oppo Reno 11 புதிய Android 14 based Color OS 14ல் இயங்குகிறது.

மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக பயனர்கள் 32-megapixel selfie camera கொடுக்கப்பட்டுள்ளது.

Connectivity
இதில் dual SIM 5G, NFC, Bluetooth 5.3, IR blaster, Wi-Fi 6. போன்ற பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Security
பாதுகாப்பிற்காக, இது in-display fingerprint sensor மற்றும் face unlock அம்சம் உள்ளன.

தொலைபேசி 5000mAh Battery மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 67W SuperWook சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

OPPO Reno 11 விலை
Reno 11 5G ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB storage variant விலை ரூ.29,999. Reno 11 5G மொபைலின் 8GB RAM மற்றும் 256GB storage மாடலின் விலை ரூ.31,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rock Grey மற்றும் Wave Green ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த போன் வருகிறது. அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, நிறுவனம் ICICI Bank Cardல் உடனடி தள்ளுபடியாக ரூ.3,000 வழங்குகிறது.

இந்த மொபைலை முன்கூட்டிய ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் இ-காமர்ஸ் தளமான Flipkart மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும்.

SHARE