கோலிவுட்டில் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதை அடுத்து இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்தார். Sci Fi கதைக்களத்தில் உருவான அயலான் படத்திற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.
வசூல்
பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கல் முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அயலான் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.