விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூப்பராக வந்த போட்டோ- முதன்முறையாக அஜித்துடன் பிரபலம் எடுத்த க்ளிக்ஸ்

171

 

நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து இப்போது நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.

துணிவு படத்திற்கு பிறகு அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவர்களது கூட்டணி அமையவில்லை.

வருங்காலத்தில் கண்டிப்பாக அமைய வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கூறிக்கொண்டு வருகிறார்கள்.

அந்த நேரத்தில் தான் அஜித், மகிழ்திருமேனியை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். இவர்களது முதல் கூட்டணியில் விடாமுயற்சி என்ற படம் தயாராகி வருகிறது.

முதல் க்ளிக்
இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இப்படத்தில் நிறைய அதிரடி ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருப்பதாக கூறுகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் பலருடனும் புகைப்படங்கள் எடுத்த வண்ணம் உள்ளார்.

அப்படி அண்மையில் விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்துடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் இயக்குனர்-நடிகர் முதன்முறையாக எடுத்த க்ளிக் என லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள்.

SHARE