ஒன்லைன் சொப்பிங் மற்றும் பணம் செலுத்தும் முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை அறிந்ததே.Android Pay எனப்படும் இவ் வசதியினை அறிமுகம் செய்யும் திகதி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை இதுவரை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை.எனினும் இன்னும் சில தினங்களுக்குள் குறித்த வசதி அமெரிக்காவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது McDonald உணவு விடுதி ஒன்றில் கடந்த 21 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றில் சில தினங்களுக்குள் மொபைல் மூலமாக பணத்தினை செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் சாம்சுங் நிறுவனமும் Samsung Pay எனும் வசதியினை அறிமுகம் செய்யக் காத்திருக்கும் நிலையில் அந் நிறுவனம் அடுத்த ஒரு மாதத்திற்குள் இச் சேவையை அறிமுகம் செய்யாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் Android Pay சேவையே அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கருதப்படுகின்றது. |