நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

88

 

நகைச்சுவை ஜாம்பவான், கவுண்ட்டர் மன்னன் என ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலம் நடிகராகி அறிமுகமானார்.

இதற்குமுன் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட, 16 வயதினிலே படம் தான் இவருக்கு நடிகராக அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி வில்லனாகவும் சில திரைப்படங்களில் கவுண்டமணி மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கவுண்டமணி கடந்த 1963ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு சுமித்ரா, செல்வி என இரு மகள்கள் உள்ளனர்.

கவுண்டமணியின் மகள்
இந்நிலையில், நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கவுண்டமணியின் மகள் சுமித்ரா கடந்த சில ஆண்டுகளாகவே சேவை செய்து வருகிறாராம்.

அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் இவர் தனது கணவருடன் இணைந்து சேவை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

SHARE