வாரிசு நடிகைக்கு தாலி கட்ட போகும் சிம்பு.. ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா

141

 

40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு கட்டத்தில் அவருடன் பிரேக் அப் ஆனது.

பின் நடிகை த்ரிஷாவை காதலித்தார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகை ஹன்சிகாவுடன் சிம்புவிற்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென சில காரணங்களால் அதுவும் நடக்காமல் போய்விட்டது.

அவ்வப்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் வெளிவரும்.

பிரபல நடிகையுடன் சிம்பு திருமணம்
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு, பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை திருமணம் செய்ய போவதாக தாவல் வெளியாகியுள்ளது. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

சிம்புவுடன் இணைந்து போடா போடி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக வரலக்ஷ்மி நடித்திருந்தார். அதுவே அவருடைய முதல் திரைப்படமாகும்.

இந்த நிலையில், ரீல் ஜோடியாக திரையில் வந்த சிம்பு – வரலக்ஷ்மி இருவரும், நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக போகிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE