சமீப காலமாக, EV வாகனங்கள் உலகம் முழுவதும் உள்ள கார் பிரியர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்து வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் EV கார்களுடன் ஒப்பிடும்போது, EV ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போது, சிறப்பு அப்டேட்களுடன் வரும் EV கார்கள் வாகன பிரியர்களால் விரும்பப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தங்களது EV பதிப்புகளில் கார்களை வெளியிடுகின்றன.
சமீபத்தில் முன்னணி நிறுவனமான Citroen இந்திய சந்தையில் EC3 என்ற புதிய top-end shine variantஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஷைன் வேரியண்ட் கார்கள் ரூ.13.19 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களை இலக்காகக் கொண்டு இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Citroen EC3 கார் Shine, Shine Vibe Pack, Shine Dual Tone, Shine Dual Tone Vibe Pack ஆகிய 4 பதிப்புகளில் கிடைக்கிறது.
இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்.
புதிய Citroen EC3 Shine ஆனது முன்பக்க, பின்புற skid-plates, 15 அங்குல diamond cut alloy wheels, leather wrapped steering wheel, electrically adjustable OVRMs, rear wiper, rear defogger, rear view camera. போன்ற ஈர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
புதிய வேரியண்டில் electric powertrain மற்றும் power output உள்ளது. இந்த கார் permanent magnet synchronous motor மூலம் இயக்கப்படுகிறது, இது 56.22 bhp மற்றும் 143 Nm torque உருவாக்குகிறது.
இது அதிகபட்சமாக மணிக்கு 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் 0 முதல் 60 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டிவிடும்.
Citroen EC3 ஆனது 27.2KW பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் மைலேஜ் தரும்.
Citroen EC3 price, Citroen EC3 all electric car, Citroen EC3 Range, Citroen EV Cars, ரூ.13.19 லட்சம் முதல் மற்றொரு EV கார்., இந்தியாவில் Citroen EC3 அறிமுகம்
இந்த கார் பேட்டரியை DC fast chargerரைப் பயன்படுத்தி வெறும் 57 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். இது 170 mm ground clearance, 315 liters boot space மற்றும் 2540 mm wheel base ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.
Citroen EC3 நான்கு monotone விருப்பங்கள் உட்பட 11 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Polar White, Platinum Grey, Steel Grey, Cosmo Blue, 7 dual tone options namely Steel Gray with Platinum Gray Roof, Polar White with Platinum Gray Roof, Platinum Gray with Polar White Roof, Steel Gray with Polar White Roof, Steel Gray with Cosmo Blue Roof, Polar White with Cosmo Blue Roof ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.