வரலட்சுமியை திருமணம் செய்யும் சிம்பு.. திருமண தேதி அறிவிப்பு, திடீரென வெளிவந்த தகவல்

66

 

நடிகர் சிம்புவிற்கும் நடிகை வரலக்ஷ்மிக்கும் திருமணம் என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் ஒன்று வெளிவந்தது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்தும், வரலக்ஷ்மி தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவிற்கு திருமணம் என தொடர்ந்து பல தகவல்கள் வெளிவரும். பிரபல நடிகையுடன் சிம்புவிற்கு திருமணம் என பேசப்படும். ஆனால், அதன்பின் அது வெறும் வதந்தி தான் உண்மையில்லை என கூறுவார்கள்.

உண்மை இதுதான்
இந்நிலையில், சிம்பு – வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என சிம்பு தரப்பில் இருந்து தெரிவித்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் வரலக்ஷ்மி தரப்பில் இருந்து சிம்புவிற்கு எனக்கும் திருமணம் இல்லை. அவர் என்னுடைய நண்பர் என கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் சிம்பு – வரலக்ஷ்மி திருமணம் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SHARE