விஜய் படத்தை வாங்க மறுத்த நிறுவனம்.. தளபதி-கே இப்படியொரு நிலைமையா

61

 

தளபதி விஜய் தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறார்கள். மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான Goat-ல் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனக்ஷி சவுத்ரி, பிரஷாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அடுத்ததாக Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை வாங்க மறுத்த நிறுவனம்
விஜய் படம் என்றால், அப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடனே சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை உள்ளிட்ட மற்ற அனைத்து உரிமைகளும் விற்பனை ஆகிவிடும்.

ஆனால், தற்போது விஜய் படத்திற்கு சோதனை காலம் என்று தான் சொல்ல வேண்டும். Goat படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்பனை ஆகவில்லையாம். இப்படத்தை வாங்க வந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மிகப்பெரிய தொகை ஒன்றை Goat படக்குழு கூறியுள்ளது. இதனால் ஷாக்கான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம்.

இதனால், Goat படத்தை அமேசான் நிறுவனத்திடம் விற்பனை செய்ய முயற்சிகளை படக்குழு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் Goat படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்ற போகிறது என்று.

SHARE