தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா.
இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கனகா, ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இருந்த கனகா 2007ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார் என்றும் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லையாம்.
ஆனால் இவரது திருமண வாழ்க்கை குறித்து வெளிவந்த விஷயங்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இடையில் நடிகை கனகா இறந்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் வர பின் அவரே ஒரு வீடியோ வெளியிட்டார்.
சரத்குமார் பேட்டி
நடிகை கனகா சில காரணங்களால் பல வருடங்களாக அவர் வீட்டைவிடடு வெளியே வராமல் தனிமையாக இருந்து வருகிறார், அதற்கான காரணமும் தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் சரத்குமார், கனகா குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், நடிகை கனகா ஒரு நல்ல உழைப்பாளி, சினிமா மீது அவர் அதிக காதலை கொண்டிருந்தார், ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும் வருத்தங்களும் அவர் மனதில் ஒரு அழியாத காயத்தை ஏற்படுத்திவிட்டது.
சினிமாவில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று நான் பலமுறை கூறி வருகிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.