நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறர்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
நயன்தாரா 75வது படமாக அன்னபூரணி அமைத்தாலும், வலுவாக திரைக்கதை இல்லாத காரணத்தினால் அப்படம் ரசிகர்களின் மனதை தொடவில்லை என விமர்சனங்கள் கூறப்பட்டது. நயன்தாரா அடுத்ததாக டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் தற்போது மண்ணாங்கட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதற்குமுன் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தமிழில் ஐயா தான் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார்.
நயன்தாராவை திட்டிய இயக்குனர்
இந்நிலையில், ஐயா படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஹரி இடம் கடுமையாக திட்டு வாங்குனாராம். அதுவும் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹரி இடம் திட்டு வாங்கியுள்ளார் நடிகை நயன்தாரா.
முதல் நாள் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா பக்கா மாடர்ன் உடையில் வந்துள்ளார். இதை பார்த்த இயக்குனர் ஹரி கோபத்தில் நயன்தாரா கடுமையாக திட்டிவிட்டாராம். நயன்தாராவை பார்த்து, ஒழுங்கா ரூமுக்கு போ, நான் உன்னை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறேன் தெரியுமா. இப்படத்தில் பக்கா கிராமத்து பெண் ரோல் உனக்கு. ஆனால், நீ இப்படி மாடர்ன் பொண்ணு மாதிரி வந்து இருக்கிற, போய் உடையை மாத்திட்டு வா என கோபத்துடன் கூறினாராம் ஹரி. இதன்பின் நயன்தாரா ரூமுக்கு சென்று தனது உடையை மாற்றிவிட்டு வந்து நின்ற பிறகு தான் ஹரி அமைதியானாராம்.
ஐயா படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஹரி, நயன்தாராவை திட்டிய இந்த விஷயம் குறித்து அப்படத்தின் ஹீரோவான சரத்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.