இதுபோல் செய்தால் பிச்சை எடுப்பேன் என்கிறார்கள்- விமர்சனங்கள் குறித்து KPY பாலா

76

 

விஜய்தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா.

இப்படியே நிறைய காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த பாலாவிற்கு பெரிய ரீச் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அடுத்தடுத்த சீசன்களில் தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை அசத்தினார்.

அந்நிகழ்ச்சி மூலும் பட வாய்ப்புகள் கிடைக்க ஒருபக்கம் நடிப்பு இன்னொரு சமூக அக்கறை கொண்ட நபராகவும் இருக்கிறார்.

தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன் ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களுக்கு உதவுவது, ஆம்புலன்ஸ் வாங்கிய தருவது என நிறைய உதவிகள் செய்த வண்ணம் உள்ளார்.

கமெண்டுகளுக்கு பாலா
சமூக வலைதளத்தில் பாலா செய்யும் உதவிகளுக்கு ஆதரவு குவிந்து வந்தாலும் சிலர் மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

அதுகுறித்து பாலாவிடம் கேட்டபோது, இப்படியே உதவிகள் செய்தால் நீ சிக்னலில் பிச்சை தான் எடுப்ப, அப்போ கூட நான் பிச்ச போடாம தான் போவேன் என பதிவிடுகின்றனர்.

நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறோனோ? அந்த சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் வரும் அது எனக்கு சந்தோஷம், என்னால் முடிந்த வரை கொடுப்பேன். எதிர்காலம் என்னை காப்பாற்றும் என்று பேசி இருக்கிறார்.

SHARE