யுவன் சங்கர் ராஜா கடந்த 2015ஆம் ஆண்டு ஜஃப்ரூன் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், அதே மத்ததை சேர்ந்த ஜஃப்ரூன் நிசா என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஆம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு இது மூன்றாவது திருமணம் ஆகும்.
திருமண வாழ்க்கை
கடந்த 2005ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரை காதலித்து மணமுடித்தார் யுவன். இரண்டு ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரித்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.
இதன்பின் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன். இவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் யுவனுக்கு சரியாக அமையாத காரணத்தினால் இருவரும் 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தின் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக யுவன், இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும் தனது பெயரை அப்துல் காலிக் என்றும் மாற்றிக்கொண்டார். அப்போது இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஜஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின் அவரை திருமணம் செய்துகொண்டு, சியா என்ற பெண் குழந்தைக்கு தந்தையானார்.