ரஜினிகாந்த் கையில் சரக்கு.. பார்ட்டியில் முன்னணி நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், இதோ

78

 

திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று திடீரென தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினி, மோகன்லால், கார்த்திக்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையில் மது வைத்திருக்கும் இந்த புகைப்படத்தில், அவருடன் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் இருக்கிறார். மேலும் நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கார்த்திக்கும் இவர்களுடன் இருக்கிறார்.

பார்ட்டில் ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பார்ட்டியில் இவர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் கேடு. இதை ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என பல மேடைகளில் கூறியிருக்கிறார். மேலும் இதுபோன்ற கெட்ட விஷயங்களில் இருந்து தன்னை மாற்றியவர் தனது மனைவி லதா தான் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE