ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் வேட்டையன், தலைவர் 171 ஆகிய படங்களை கைவைசம் வைத்துள்ளார். தலைவர் 171 முடிந்தபின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது 172வது படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 171
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தலைவர் 171. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் அன்பு-அறிவு மாஸ்டர்ஸ் கமிட்டாகியுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரத்னகுமார்
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்தவர் இயக்குனர் ரத்னகுமார். இவர் லோகேஷின் நெருங்கிய நண்பர் என்பதை அறிவோம். அதே போல் இயக்குனர் ரத்னகுமார் தளபதி விஜய்யின் வெறித்தனமான தீவிர ரசிகரும் ஆவார்.
ரஜினியை சீண்டியபடி ரத்னா
லியோ படத்தின் வெற்றி விழா மேடையில், ரஜினியை சீண்டியபடி சில வார்த்தைகளை மறைமுகமாக ரத்னகுமார் பேசியிருந்தார் என கூறப்படுகிறது. இதனால் தான் இதுவரை மூன்று முறை லோகேஷ் படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்த ரத்னகுமார், தலைவர் 171 படத்தில் பணிபுரியவில்லை என சொல்லப்படுகிறது.
தலைவர் 171 படத்திலிருந்து வெளிவந்த ரத்னகுமார், தன்னுடைய படத்தையும் ட்ராப் செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். ஆம், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, ரத்னகுமார் இப்படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால், ரஜினி குறித்து ரத்னகுமார் இப்படி பேசியதும், ரஜினியின் தீவிர ரசிகரும், பக்தருமான ராகவா லாரன்ஸ், இந்த படத்தில் நடிக்கமாட்டேன் என கூறிவிட்டாராம். இதனால் ரத்னகுமார் இயக்கவிருந்த இப்படமும் அவர் கையை விட்டு போய்விட்டதாக திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
சர்தார் 2
இப்படியொரு நிலையில், கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் எழுத்தாளராக கமிட்டாகியுள்ளாராம். தற்போது அதற்கான டிஸ்கஷனில் ரத்னகுமார் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேயாத மான் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரத்னகுமார், ரஜினியை சீண்டி பேசியதால் இப்படியொரு நிலைமைக்கு வந்துள்ளார் என பேசப்படுகிறது.