விஷால் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படத்தை மிஸ் செய்துள்ள சிம்பு- என்ன படம் தெரியுமா?

76

 

நடிகர் சிம்பு, சினிமாவில் சந்திக்காத வெற்றி இல்லை, தோல்வியும் இல்லை, அதேசமயம் எதிர்க்கொள்ளாத பிரச்சனைகளே இல்லை எனலாம்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி கொரோனா காலத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து ஆளே இப்போது மாறிவிட்டார். சிம்பு இடையில் நிறைய தோல்வி படங்களை கண்ட நிலையில் அவருக்கு மாஸ் ஹிட் படமாக அமைந்தது மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான இப்படம் மாபெறும் வெற்றிப்பெற்றது.

அதன்பிறகு சிம்பு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து வர தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார்.

மிஸ் செய்த படம்
இந்த நிலையில் சிம்புவின் திரைப்பயணத்தில் மிஸ் செய்த ஒரு ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கடைசி மகனாக நடித்தவர்தான் தருண் கோபி, இவர் இயக்குனரும் கூட.

காலத்திற்கு ஏற்ப படங்கள் இயக்கி மாஸ் காட்டும் இயக்குனர்
முதன்முதலில் இவர் இயக்கிய திரைப்படம் திமிரு, இதில் விஷால், ரீமா சென் போன்றவர்கள் நடிக்க மிகப்பெரிய ஹிட்டடித்தது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க வைக்க சிம்புவை தான் இயக்குனர் அணுகியுள்ளாராம்.

சிம்புவிற்கும் கதை மிகவும் பிடித்துள்ளதாம், தனது அம்மாவிடமும் கதையை கூறியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு பெண் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படுவது போல் தெரிகிறது என கூற சிம்பு இந்த படத்தை மிஸ் செய்துள்ளார்.

SHARE