அதிரடியாக விலை குறைந்த IPhone 15.., Flipkart -ல் விற்பனை: OnePlus 12 -க்கு போட்டியாக மெகா தள்ளுபடி

129

 

Apple iPhone 15 மீது நம்ப முடியாத அளவுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

நேற்று முதல் OnePlus 12 Smart Phone -ன் 12GB | 256GB வேரியண்ட் ரூ.64,999 விலையில் வாங்க கிடைக்கிறது.16GB | 512GB வேரியண்ட் ரூ.69,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

இது iPhone 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை (ரூ.79,900) விட மிகவும் குறைவான விலைக்கு OnePlus 12 வாங்க கிடைக்கிறது.

இதனால் iPhone 15 மாடலின் Basic Storage ஆப்ஷன் மீது 17% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி மூலம் நாம் iPhone 15 போனை ரூ.79,999 க்கு பதிலாக ரூ.65,999 க்கு வாங்க முடியும். அதாவது ரூ.13901 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

IPhone 15 அம்சங்கள்
இது 6.1-inch Super Retina XDR OLED screen -யை கொண்டுள்ளது. இது வழக்கமான நாட்ச் டிசைனுக்கு பதிலாக ஐபோன் 14 ப்ரோ பயனர்களிடையே மிகவும் பிரபமான அம்சங்களில் ஒன்றாக கருத்தப்படும் Dynamic Island Notch-யை கொண்டுள்ளது.

கேமராக்களை பொருத்தவரை, 12 MP dual rear camera செட்டப்பை கொண்ட ஐபோன் 14 மாடலை விட, iPhone 15 மாடலின் கேமரா செட்டப் முன்னேற்றம் அடைந்துள்ளது. iPhone 15-ல் 48 48 MP மெயின் கேமரா சென்சார் உடன் நீடிக்கப்பட்ட பேட்டரியையும் கொண்டுள்ளது.

மேலும், iPhone 15 ஆனது 20 மணிநேரம் வரை வீடியோ பிளேவையும், 80 மணிநேரம் வரை ஆடியோ பிளேவையும் வழங்குகிறது.

SHARE