நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் எனப் பல படங்களில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி கலந்துகொண்டு பேசிய சாக்ஷி அகர்வால், “நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் ராஜா ராணி பட வாய்ப்பு வந்தது. அப்போது நான் மாடலிங் செய்து வந்தேன். என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்”.
“அப்போது அவர்கள் என்னிடம் படத்தில் ஆர்யா ஹீரோ, நீங்கள் இரண்டாம் ஹீரோயின் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் எனக்கு தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது. அப்போது அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பினேன்”.
“அவர்கள் கூறியவாறு இரண்டு நாள் ஷூட்டிங் சென்றேன் அதன் பின் எனக்கு எந்த ஒரு அழைப்பு வரவில்லை. கடைசியில் பார்த்தால் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ரிலிஸ் ஆகிவிட்டது. அப்போதே இது தொடர்பாக நான் இயக்குனரிடம் பேசி இருக்கனும் பேசாமல்விட்டது பெரிய தப்பு” என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.