வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

73

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது ஹீரோவாக பட்டையை கிளப்பி வருகிறார் சந்தானம்.

வடக்குப்பட்டி ராமசாமி
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்துள்ள முதல் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே டிக்கிலோனா எனும் ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணைந்த இந்த கூட்டணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். கண்டிப்பாக டிக்கிலோனா படம் போலவே இப்படமும் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.

முதல் நாள் வசூல் விவரம்
ஆனால், வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சுமாராக இருக்கிறது என்று தான் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. ஒரு பக்கம் இப்படியொரு விமர்சனம் இருக்க, மறுபக்கம் படம் நல்லா இருக்கு என்ற விமர்சனமும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது

SHARE