டாப் ஸ்டார் பிரஷாந்த், அசுரன் நாயகி மஞ்சு வாரியர் தவறவிட்ட மாபெரும் வாய்ப்பு..

59

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராஜிவ் மேனன். இவர் தற்போது நடிக்கவும் துவங்கிவிட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இவர் இயக்கத்தில் பல கல்ட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அப்படி அவர் இயக்கி கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

காதல் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படத்தில் மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்.

ஆம், மம்மூட்டி நடித்த கேப்டன் பாலா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பார்த்திபன் தானாம். அதே போல் அஜித் நடித்த மனோகர் கதாபாத்திரத்தில் பிரஷாந்த் தான் முதன் முதலில் நடிக்க இருந்துள்ளார். மேலும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த மீனாட்சி கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தான் நடிக்கவிருந்தாராம்.

SHARE