சிவகார்த்திகேயன் அயலான் படத்தால் விநியோகஸ்தர்களுக்கு இத்தனை கோடி நஷ்டமா.. ஷாக்கிங் ரிப்போர்ட்

62

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் அயலான். பல பிரச்சனைகளை கடந்து வெளிவந்த இப்படம் லாபத்தை கொடுத்ததா? இல்லை நஷ்டத்தை கொடுத்ததா என பார்க்கலாம் வாங்க.

அயலான் படத்தின் மொத்த பட்ஜெட் – ரூ. 95.5 கோடி

அயலான் பிசினஸ் – ரூ. 86.75 கோடி

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் – ரூ. 8.75 கோடி

ஷாக்கிங் ரிப்போர்ட்
அயலான் படம் பிசினஸ் செய்யப்பட்ட போது தயாரிப்பாளருக்கு ரூ. 8.75 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், அயலான் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் தமிழ் மொழி மட்டுமே விற்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் இதுவரை தயாரிப்பாளர் யாருக்கும் கொடுக்கவில்லை. அப்படி அதை கொடுக்கும் பட்சத்தில் இந்த நஷ்டம், லாபமாக மாறும் என கூறப்படுகிறது.

அயலான் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 34.33 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அயலான் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் விநியோகஸ்தர்களுக்கு ரூ. 26 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது என்கின்றனர். ஆகையால் கிட்டதட்ட ரூ. 8.33 கோடி விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என கூறப்படுகிறது.

கேரளாவில் அயலான் படத்தை ரூ. 75 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். இப்படத்திற்காக பப்ளிசிட்டி செய்த செலவு ரூ. 25 லட்சம் என்ற கணக்கில் மொத்தமாக ரூ. 1 கோடியை அந்த விநியோகஸ்தர் முதலீடு செய்துள்ளார். இப்படம் கேரளாவில் ரூ. 72.66 லட்சம் வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 34 ஷேர் லட்சம் கிடைத்துள்ள நிலையில், ரூ. 66 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் கூட அயலான் படத்திற்கு லாபம் கிடைக்கவில்லை, பெரிய நஷ்டம் தான் ஏற்பட்டள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE